அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு சம்மாந்துறையில் கௌரவம்

சம்மாந்துறையின் சரித்திரத்தில் வரலாற்றுத் தடம் பதித்து கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது முஸ்லீம் அரசாங்க அதிபராக அண்மையில் பதவி உயர்வு பெற்ற வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா ஊர் மக்களால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று பி.ப. சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது SWDC மற்றும் தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் ஒன்றியம் உட்பட இன்னும் சில அமைப்புக்களின் ஏற்பாட்டில் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷ_ராவின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இவ் விழாவிற்கு எவ்வித அரசியல் வேறுபாடுகளுமின்றி ஊரிலுள்ள அனைத்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்விமான்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை விஷேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *