2020 ஐயும் தாண்டி காப்புறுதித்துறையின் எதிர்காலத்தை நோக்கும் NAFLIA 2018

தேசிய ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் 9வது ஒன்றுகூடல் நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. இதன் தொனிப்பொருள் ‘2020 ஐயும் தாண்டிச் சென்ற ஆயுள் காப்புறுதி ஆலோசகர்” என்பதாகும்.

இது NAFLIA 2018 2018 எனவும் அழைக்கப்படுகின்றது. நிகழ்வின் சகல அம்சங்களின் போதும் குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆயுள் காப்புறுதி ஆலோசகரின் செயற்பாட்டில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் தரவு உயர்வுகள் பற்றி அங்கு எடுத்துரைக்கப்பட்டது.

கொழும்பு ஷன்கரி-லா ஹொட்டலில் கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி இடம்பெற்ற NAFLIA நிகழ்வு, இலங்கை ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் மிக முக்கியமான ஒரு வைபவமாகும். இந்த வைபவம் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன் முக்கிய ஏற்பாட்டாளராக இலங்கை காப்புறுதிச் சங்கத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஒன்றுகூடல் செயற்படுகிறது. நாட்டின் ஆயுள் காப்புறுதித் துறை வளர்ச்சியை இது பெரிதும் எதிர்பார்க்கிறது.

இலங்கை காப்புறுதி நியமங்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மனோ தித்தவெல்ல NAFLIA 2018 2018 இல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கௌரவ அதிதியாகவும் ஊக்குவிப்புப் பேச்சாளராகவும் பங்குபற்றியிருந்தார்.

IRCSL இன் பணிப்பாளர் நாயகம் திருமதி தமயந்தி பெர்னாண்டோ விசேட அதிதியாகக் கலந்து கொண்டதோடு, IASL இன் தலைவரும் HNB அசூரன்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. தீப்தி லொக்குஆரச்சியும் இதில் கலந்து கொண்டனர்.

IASL இன் பொருளாளரும், ஜனசக்தி லைஃப் பிஎல்சி யின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான  ஜுட் பெர்னாண்டோ, IASL இன் செயலாளர் நாயகம்  உபாலி சமரசிங்க, MSF இன் முன்னாள் தலைவரும் ஜனசக்தி லைப் பிஎல்சி யின் சிரேஷ்ட பிரதி முகாமையாளர் – சந்தைப்படுத்தல் திரு. சமித்த ஹேமச்சந்திர,

MSF இன் தலைவரும் ஜனசக்தி லைஃப் பிஎல்சி யின் லைஃப் நடவடிக்கைகள் பிரிவின் பொது முகாமையாளர்   ஹர்ஷ வீரவர்தன, NAFLIA வின் திட்டத் தலைவரும் லைஃப் இன்சூரன்ஸ் கோப்பரேஷன் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் விற்பனை மற்றும் விநியோக பிரதிப் பொது முகாமையாளர்  மாதவ குலரத்ன ஆகியோர் இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.

மேலும், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், முகாமைத்துவ பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்கள், முகாமையாளர்கள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் இவர்களுடன் மிக முக்கியமாக இலங்கையின் சகல ஆயுள் காப்புறுதி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகல ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களும் கலந்து கொண்டார்கள்.

தொழில்நுட்ப மாற்றங்களினால் ஏற்படும் சமூகநிலை மாற்றங்களில் காட்ட வேண்டிய அவதானம் பற்றி   தித்தவெல்ல மற்றும் லொக்குஆரச்சி ஆகியோர் பிரதானமாக விளக்கிக் கூறினார்கள்.

காப்புறுதித்துறையின் அபிவிருத்திக்கு மாறிவரும் தொழில்நுட்பத்தை நன்கு பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி அவர்கள் மேலும் எடுத்துரைத்தார்கள்.

பேராசிரியர் அமரதுங்க, ஜப்பானிய வாழ்க்கையில் நடந்த செயற்பாடுகள் பற்றித் தெரிவித்து, அதன் மூலம் பார்வையாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். காப்புறுதித் துறையில் மாத்திரமன்றி, நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், ஜப்பானியர்களிடம் காணப்பட்ட தேசப்பற்று மாற்றங்களுக்கு முகம் கொடுத்தல், நேர்மை மற்றும் நாணயம் என்பனவற்றை இவர் இங்கு விசேடமாகத் தெரிவித்தார். அவற்றின் மூலம் வளர்ச்சியை அடைந்துகொள்ளலாம் என்பது பற்றியும் அவர் விளக்கிக் கூறினார்.

2017 ஆம் ஆண்டின் காப்புறுதி மாதத்திற்கான விருது வழங்கும் வைபவம் இந்த நிகழ்வின் இறுதி அம்சமாகக் காணப்பட்டது. செலிங்கோ லைஃப் இன்சூரனிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திரு. எஸ்.கே.ஏ.எஸ்.பெரேரா அதிகூடிய காப்புறுதிகளை விற்பனை செய்து அதிகபட்ச கட்டுப்பணத்தை அடைந்துகொண்டு வெற்றியாளராகத் தெரிவானார்.

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் 10 வருடங்கள் முந்தியிருப்பது ஒரு நிமிடம் பிந்தியிருப்பதைவிட சிறந்தது என்பதை மக்களுக்கு விளக்குவதே IASL இனால் ஏற்பாடு செய்யப்படும் NAFLIA மற்றும் ஏனைய சகல நிகழ்ச்சிகளினதும் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *