ATMஇன் அதிக எண்ணிக்கை மற்றும் பயன்பாட்டிற்கான LankaPay Technnovation விருதினை வென்ற DFFC வங்கி

கொழும்பு – ஷங்ரிலா ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற LankaPay Technnovation விருதுகளில் ‘The Best Common ATM Acquirer of the year – Category C’  என்ற பிரிவில் DFCC வங்கி வெற்றியாளராக தெரிவானது.

DFCC  வங்கியின் நாடெங்கிலும் கிளை வலையமைப்பு 138ஆக உள்ளதுடன், தானியங்கி பணம் பெறல் இயந்திர வலையமைப்பு 115ஆக உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சௌகரியம் மற்றும் அணுகும் வசதியை வழங்குவதுடன், நிதி உள்ளடக்கத்தை வசதியளிப்பதற்கும், புதிய நகரங்களில் தமது தானியங்கி பணம் பெறல் இயந்திரம் மற்றும் கிளைகளை பரவலாக்கும் செயற்பாட்டில் அண்மைய மாதங்களில் வங்கி துரிதமாக ஈடுபட்டு வருகின்றது.

செலவு குறைந்த மற்றும் சௌகரியமான நிதி சேவைகளை வழங்குவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை கொண்டு வரல் என்ற தொலைநோக்கினால் DFCC வங்கியின் தொழிநுட்ப தீர்வுகள் அமைந்திருக்கின்றன.

இந்த விருது வென்றமை குறித்து கருத்து தெரிவித்த DFCC  வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரி, லக்ஸ்மன் சில்வா ,

“நாடு முழுவதிலும் துரித தானியங்கி பணம் பெறல் இயந்திரம் மற்றும் கிளை பரவலாக்கம் உள்ளடங்கலாக மூலோபாய விரிவாக்கல் திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம். வாடிக்கையாளருக்கான வங்கி என்ற எமது கோட்பாட்டிற்கு அமைய வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம் மற்றும் எளிதான அணுகும் வசதியை வழங்குவதற்கு 115 இடங்களில் எமது தானியங்கி பணம் பெறல் இயந்திர வலையமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், நாம் LankaPay  வலையமைப்புடன் இணைந்துள்ளமையால், ஏனைய வங்கி அட்டைகளை வைத்திருப்போரும் எமது DFCC வங்கி தானியங்கி பணம் பெறல் இயந்திரத்தின் ஊடாக சேவைகளை அணுக முடியும். இதன் ஊடாகவும் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது என குறிப்பிடுவதில் நாம் மகிழ்வு கொள்கின்றோம்” என்றார்.

DFCC Virtual Wallet – வங்கித் துறையில் இலங்கையின் முதலாவது Virtual Wallet; Lanka Money Transfer –  இணையம் சார் வெளிநாட்டு பணக்கொடுப்பனவு முறைமை; MTeller – வீடு வரையான வங்கி சேவை மற்றும் Premier Go – முதலாவது ஊடாடும் முதன்மை வங்கி செயலி போன்ற வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவைகளை வழங்குவதற்கான தொழிநுட்பம்சார் உற்பத்திகள் மற்றும் சேவைகளுடன் கைபேசி வங்கிச் சேவையிலும் DFCC வங்கி முன்னிலை வகிக்கின்றது.

அனைத்து வகையான தொழில்களுக்காகவும் எழுந்தமான கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவ தீர்வான DFCC iConnectஇனை வங்கி அண்மையில் அறிமுகம் செய்தது.

DFCC வங்கியானது, முன்னணி வர்த்தக வங்கிக்கான நிபுணத்துவத்தையும், பரிமாணமிக்க வர்த்தக வங்கியாகவும் திகழ்கின்றது. Chartered Institute of Management Accountants (CIMA)  மற்றும் International Chamber of Commerce Sri Lanka (ICCSL) என்பவற்றினால் இலங்கையில் சிறந்த பத்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக வங்கி தெரிவு செய்யப்பட்டது.

Fitch Ratings Lanka Limited இனால் AA-(lka) என DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *