உண்ணாவிரதக் கைதிகள் குறித்து இன்று ரணில் – கூட்டமைப்பு பேச்சு

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும் இடையே முக்கிய பேச்சு இடம்பெறவுள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்தப் பேச்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபர் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப் பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றமை குறித்து கூட்டமைப்புப் பேச்சாளர் எம்.ஏ. சுமந் திரன் நேற்றுக் காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கும் கொண்டு வந்தார்.

இதனையடுத்து நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுமந்திரன் எம்.பியுடன் தொடர்பு கொண்ட அதிகாரிகள், இன்று பிற்பகல் 3 மணிக்கு அரசியல் கைதிகள் தொடர்பில் பேச்சு இடம்பெறும் என்ற தகவலை வழங்கினார் எனத் தெரி விக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசியிருந்தார். இதன்போது வெளிநாடு சென்றுள்ள சட்டமா அதிபர் நாடு திரும்பியதும் இது குறித்துப் பேச்சு நடத்தப்படும் எனப் பிரதமர் பதலளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இன்று இந்தப் பேச்சு நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *