நியூயோர்க் மாளிகையில் மைத்திரிக்கு விருந்தளித்தார் ட்ரம்ப்
ஐ.நாவின் 73ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நியூயோர்க் மாளிகையில் (New York Palace) இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ் இராப்போசனத்திற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், அவரது பாரியார் ஜயந்தி சிறிசேனவுக்கும் உற்சாகமாக வரவேற்பளிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதிகள் தமது பாரியார்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.