குழந்தைகளின் ஆபாச விடியோக்கள் மும்மடங்காக அதிகரிப்பு

இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

 

Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

அவை குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்கும் அதிகாரம் கொண்டவை.

இந்நிலையில், IWF அமைப்பு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு குழந்தைகளின் ஆபாச வீடியோக்களின் 78 ஆயிரம் URL இருந்ததாகவும் அது தற்சமயம் 37 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், வன்புணர்வு மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அடங்கிய வீடியோக்கள் 33 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுபற்றி IWF அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளதாவது,

குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாக மாறி வருகின்றனர். அவர்கள் ஆபாசப் படங்களை பதிவு செய்வதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். அவை தொடர்ச்சியாக பகிரப்படுகின்றன. ஆனால், அவர்கள் மாட்டிக்கொள்ளாதபடி வீடியோக்களை பதிவு செய்கின்றனர். அவற்றை நீக்கும் பணியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இருப்பினும், சில இணையத்தளங்களை நீக்குவது கடினமாக உள்ளது. இதில் ஐரோப்பா முதல் இடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

IWF அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், குழந்தைகள் மீதான வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அவற்றிலிருந்து சிறுவர்களைக் காப்பது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாக மாறி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *