கண் பார்வை குறையக் காரணம் என்ன? – விசாரணைக்கு ராஜித உத்தரவு

நுவரெலியா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்ற நோயாளர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச் சபை மாநாடு உள்ளிட்ட அரச வைபவங்கள் பலவற்றில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குச் சென்றுள்ள அமைச்சர் ராஜித நுவரெலியா வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் அறிந்துகொண்டதன் பின்னர் அவசர தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவுக்கு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நுவரெலியா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர்களுள் 17 பேர் பார்வை இழந்ததைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர் 17 பேரும் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் மேற்படி அனைவரும் உறவினர்களுடன் உதவியுடன் மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வைத்தியர்களின் நேரடிக் கண்காணிப்பில் இவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் ஏனைய எந்தவொரு வைத்தியசாலைகளிலும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *