முடியாவிட்டால் அரசை எம்மிடம் ஒப்படையுங்கள்! – மஹிந்த கூறுகின்றார்

ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமகால பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று (சனிக்கிழமை) கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 “இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு தற்போதைய அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவம் இன்மையே காரணம். இவர்கள் ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தத் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் தற்போதைய நிலையை விட நாடு சீர்குலையும். ஆகவே, இதற்கான தலைமைத்துவத்தை பயன்படுத்த வேண்டும்.  இந்த விடயம் தொடர்பில் எதனையும் மேற்கொள்ளாது, ஜனாதிபதியோ அல்லது பிரதமரே, அமைச்சரோ ரூபாவின் விலை அதிகரிக்கும் என கூறுவார்களாயின் நிச்சயமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முழு ஆசிய வலயத்திலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையின் பொருளாதார நிலையை சீராக நாங்கள் பேணியிருந்தோம்.
இதன் காரணமாகவே அன்று நாடு ஸ்திரத்தன்மையுடன் இருந்தது. இன்று அந்நிலை மாறுபட்டு காணப்படுகின்றது. இந்நிலை தொடருமாயின் முதலீட்டாளர்கள் ஒருபோதும் வரப்போவதில்லை.
ரூபாவின் வீழ்ச்சியை தடுக்க முடியாவிடின் அரசாங்கத்தை கையளித்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள்”- என்றார்.
படப்பிடிப்பு – நசார் மொஹமட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *