2018 ஆம் ஆண்டின் தன்னிகரற்ற தெரிவுகள் இப்போது ODEL இல்

இலங்கையில் நவநாகரீகத்தில் வசீகரம் பற்றிய வணிக நாமம் என்றால் உனடடியாக எமது உள்ளத்தில் உதிப்பது ODEL (ஒடெல்) நிறுவனம் தான்.

வசீகரிக்கும், கவர்ச்சியான, புதுப்போலிவுடன் கூடிய நவநாகரிக ஆடை அணிகலன்களை தன்னகத்தே தாங்கிய நவநாகரிகத்தின் உரைவிடமாக ODEL (ஒடெல்) நிறுவனம் தன்னை நிறுவியுள்ளது.

ஒரு நெரிசல் மிக்க நகர்ப்பகுதியில் ஹிமாலய சாரலில் சுற்றித்திரியும் ஒரு அனுபவத்தைத் தருவதாகவும், மலைச்சாரலில் உள்ள வண்ணங்களை பொறுக்கி எடுக்கும் விதமாகவும், தனது செழுமை மிக்க பிரத்தியேக கலாச்சாரம் மற்றும் வடிவங்கள் மூலம் எதிர்பார்ப்புக்களை மிஞ்சி ஆத்மாவை பரவசப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

ODEL (ஒடெல்) நிறுவனத்தின் முதன்மை நிறுவனமாகிய SOFTLOGIC HOLDINGS PLC (சொப்ட்லொஜிக் ஹோல்டிங் பீ.எல்.சீ) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுப் பணிப்பாளர் திரு னுநளசைநந முயசரயெசயவநெ அவர்கள் குறிப்படும் போது “மக்கள் இப்போது உணர்வுபூர்வமான விடயங்களை எதிர்பார்க்கின்றார்கள்.

அமைதியையும் ஆறுதலையும் அடைவதற்கு இயற்கையோடு இணைய விரும்புகின்றனர். எமது இந்நிகழ்வின் கருப்பொருள் “ஹிமாலயம்” உள்ளத்திற்கான ஒரு மந்திரப்பாதை, மேலும் இயற்கையோடும் அதன் வர்ணங்களோடும் அக்கலாச்சாரத்தோடும் மீள் இணைப்பதற்கான ஒரு தளம் என்பதாகும். மேலும் இவ்விடம் உணரவுபூர்மான, விடயங்களை தாங்கிய, இயற்கை எழில் பொங்கும் ஒரு தளமாகும்” எனக்குறிப்பிட்டார்.

இயற்கையோடு எம்மை மீள் இணைக்கக்கூடிய வசிகரமான வடிவமைப்பாளர்களான Gurung, Phillip Lim, Etro, Missoni, மற்றும் Simone Rocha போன்றவவர்களின் வடிவமைப்புத் தொகுதியை உள்ளடக்கியதாக ODEL FALL COLLECTION காணப்படுகின்றது.

ODEL FALL COLLECTION இல் உள்ள ஆடை, அணிகலன்கள் இயற்கையைப் பிரதிபலிக்கக்கூடீய வண்ணங்களையும், பன்முகத்தன்மையையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவை பாரம்பரிய மரபுகளை பேணி வடிவமைக்கப்பட்டவையாகவும் நெய்தல் அலங்காரங்களில் கவனம் செலுத்தி தயாரிக்கப்பட்ட கைவண்ணத்தின் புதிய அலைகளை உருவாக்கும் விதமாகவும் அமைந்துள்ளன.

பாரம்பர்ய சதுர வடிவங்கள், திபெத்திய ஓவியங்கள், டவீட் வடிவங்கள் கண்கவர் தோற்றம் கொண்ட சால்வைகள், பெஸ்லே ஓவியங்கள் என்பன இத்தன்னிகரற்ற நிலையத்தின் மையப்பகுதியில் இடம்பிடித்துள்ளன.

இவை ODEL (ஒடெல்) நிறுவனத்தின் பிரத்தியேக தரத்தை வெளிப்படுத்துபவையாகவும் கலந்து பொருத்தும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றன.

உங்கள் விருப்பத்திற்குரிய ODEL (ஒடெல்) காட்சியறையில் பன்முகப்படுத்தப்பட்ட வுசயனௌ போக்குகளைக் கொண்ட தெரிவுகள் வைக்கப்பட்டுள்ளன.

நீங்கள் ஏற்கனவே உங்கள் ஆடை பற்றிய பற்பனை வைத்துள்ளீர்கள் என்றால் ODEL (ஒடெல்) அதனை நிவர்த்தி செய்கின்றது” எதிர்காலத்தில் வீதிகளில் உலாவர இருக்கும் நவநாகரீகங்களை நாங்கள் உள்ளடக்கியுள்ளோம்.

அவை உங்கள் ஒவ்வொருவருக்குமான தனித்துவத்தை கொண்டு வருபவையாக காணப்படும்.

ஆடவர்களுக்கும் சிறுவர்களுக்குமான பிரத்தியேக அலகுகளை உள்ளடக்கிய ஒரு திருப்பு முனையாக ஹிமாலாய சாரல் காணப்படுவதோடு, ஆடவர்களுக்கான ஆடைகள் பசுமை வடிவங்களையும், நிலம் மற்றும் இயற்கைக் கற்கள் சார்ந்த வடிவத்தையும் பிரதிபலிப்பதாகவும் இயற்கையில் அதிசயங்களை வெளிக்கொண்டு வரும் அலகுகளை தன்னகத்தே கொண்டதாகவும், அமைந்துள்ளன.

சிறுவர்களின் ஆடைகள் கண்கவர் வர்ணங்களில் உங்கள் சின்னஞ்சிறுசுகளை களிப்பூட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிற்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நகைகள் மற்றும் ஆபரணங்கள் கண்ணுக்கு விருந்தாகவும், பாரம்பர்ய வடிவமைப்புக்களை நவீன முறையில் வழங்கும் விதமாகவும், குஞ்சான், மணிகள் மற்றும் ஏனைய அலங்கார பொருட்கள் பொருத்தப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

ODEL HOME (ஒடெல் ஹோம்) இன் தெரிவுகள் பரவலான பல தயாரிப்புக்களை ஒட்டு மொத்தமாக காட்சிப்படுத்துகின்றது. மேலும் அவை ஹிமாலய நீரோட்டங்களை உங்கள் வரவேற்பரைகளில் நிரப்பக்கூடிய விதத்தில் உள்ளன.

நவீன காலத்திற்கேற்ற புது மாதிரிகளை அறிமுகம் செய்ய இதுவே தருணம் என ழுனுநுடு (ஒடெல்) நிறுவனம் கருதுகின்றது. “தேடல், கனவு, கண்டறிதல்” நவநாகரீகத்தை கண்டறிவதற்கான இச்சந்தர்ப்பம் 2018 ஓகஸ்ட் 31 முதல் உங்களுக்காக ODEL (ஒடெல்) இன் FALL COLLECTION மூலம் வந்தடைய இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *