மொபிடலின் மாபெரும் மெகா கேஷ் பொனன்ஸா கார்னிவெல் அநுராதபுரத்தில்

மொபிடெல் கேஷ் பொனான்ஸா அண்மையில் கலாச்சார வரலாற்று பெருமைமிக்க அநுராதபுரம் நகரில் இடம்பெற்றது.

தேசிய தொலைத்தொடர்பாடல் வழங்குநரான மொபிடெல் ஒழுங்கு செய்து இருந்த இந்நிகழ்வின் வெற்றிக்கு சாட்சியாக சல்காது மைதானம் முழுதும் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குழாமினால் நிறைந்து காணப்பட்டது.

அநுராதபுரத்தில் நடைபெற்ற கார்னிவெல், கேஷ் பொனான்ஸா முன்னெடுப்பின் ஒரு அங்கம் ஆகும். விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுக்கான வெகுமதிகளை வழங்குவதற்காக நாடெங்கும் பயணிக்கும் இக் குலுக்கல் நடாத்தப்படுவதோடு, இந் நிகழ்வு குடும்பத்தினர், குதூகலம் மற்றும் ஒன்றுகூடல் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு கொண்டாட்டமாக அமைந்தது. இவையே மொபிடெல்லின் வாசகமான “என்றும் உங்களுடனேயே” என்பதற்கு அடித்தளமாகக் காணப்படுகின்றன.

கார்னிவல் ஆனது சகல வயதினருக்கும் ஏற்ற விதத்தில் கொண்டாட்டங்களை கொண்டிருந்தது. இளம் வயதினர் அதிவேக 4G துணையுடனான கேமிங்; வலயத்தில் குவிந்ததோடு, அங்கு மணித்தியால கணக்கில் இலவச கேமிங்கில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக சித்திரம் தீட்டும் போட்டிகள், திரைப்பட அனுபவம் மற்றும் கோமாளிகளைக் கொண்ட இசை நிகழ்ச்சி என பல அம்சங்கள் காத்திருந்ததோடு கொண்டாட்டத்தை மேலும் குதூகலமாக்கிட வேடிக்கை பொம்மைகளும் சேர்க்கப்பட்டிருந்தன.

மேலும்; அநுராதபுர மாவட்ட மக்களின் நலனையும், வசதியையும் கருத்திற் கொண்டு மிக அரிதானதொரு செயற்பாடாக நிகழ்வு நடைபெற்ற 8 மணித்தியால நேரத்தில் மக்கள் தங்கள் அடையாள அட்டைகள் மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களுக்காக விண்ணப்பித்து அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் மிக முக்கியமான விடயமாக பிரபல கண் பரிசோதனையாளர்கள் பங்குபற்றிய கண் சிகிச்சை நிலையம் அமைந்ததோடு, மாவட்டத்திலுள்ள பிரஜைகளுக்கு 1,500 வாசிப்புக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டதோடு சிறுநீரக பரிசோதனையும் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியாக ஓர் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. ஸநிதப இசைக் குழுவினர் வருகை தந்திருந்த விருந்தினர்களை இசை மற்றும் நடன நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி ஓர் மகிழ்ச்சிகரமான நாளாக மாற்றினர்.

அத்தோடு மொபிடெல் ஓர் விசேட இணையத்தள செயலமர்வு ஒன்றினையும் நடாத்தினர். இதில் இணையத்தளத்தினை பயன்படுத்தி எவ்வாறு சிறந்த உற்பத்தி ஆக்கங்களை மேம்படுத்துவது என்பது பற்றி பிரதேசத்தின் இளம் வயதினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.; மனிதவள திறன் மேம்பாட்டு ஆலோசகர் சனத் கமகே அவர்களினால் முயற்சியாண்மை தொடர்பாக ஓர் விசேட செயலமர்வும் நடைபெற்றது.

2018 கேஷ் பொனன்ஸா மேம்படுத்தல் திட்டம் மூலம் ஆநசஉநனநள டீநணெ கார்கள் வழங்கப்படுவதோடு வருடத்துகான தினசரி மற்றும் காலாண்டு சீட்டிழுப்பில் மொபிடெலின் நம்பிக்கைமிகு மற்றும் அதிர்ஷ்ட வாடிக்கையாளருக்கு ரூபாய் 211 மில்லியன் பெறுமதியான பரிசுகளை வெல்ல முடியும். என்பதோடு 220 000 வெற்றியாளர்களுக்கு தினசரி ரூபாய் 500 இணை வருடம் முழுவதும் பெற முடியும்.

தொலை தொடர்பு துறையில் மொபிடெல் முதன்முறையாக 2016-2017 ஆண்டில் 24 மொன்டிரோ ஜீப்ஸ்களை வழங்கி மாபெரும் மேம்படுத்தலை ஆரம்பித்திருந்தது. இவ் வருடம் பெறுமதியான வாடிக்கையாளருக்கு ஆநசஉநனநள டீநணெ; கார்களை வழங்குகிறது.

கேஷ் பொனான்ஸா மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கான ஒரு ரீலோட், ரீசார்ஜ் மற்றும் பில் கொடுப்பனவு மேம்படுத்தல் நடவடிக்கையாகும். மொபிடெல் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் புறோட்பான்ட் வாடிக்கையாளர்கள் மொபிடெல் கேஷ் பொனான்ஸா குலுக்கலுக்குத் தகுதி பெறுவதோடு, ஒவ்வொரு ரூ.50 பெறுமதியான ரீசார்ஜ், ரீலோட் அல்லது பிற்கொடுப்பனவு பில் கொடுப்பனவும் ஒரு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத்தரும்.

 

இதன்போது எவ்வித மேலதிக பதிவு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என்பதோடு அனைத்து மொபிடெல் வாடிக்கையாளர்களும் தன்னியக்கமாக குலுக்கலில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

நாளாந்த பணப் பரிசுகளைப் பெறும் முற்கொடுப்பனவு வெற்றியாளர்கள் குறித்த பெறுமதிக்கு சமனான அழைப்பு நேரம், டேட்டா ஆகிய வழிமுறைகளில் பரிசைப் பெற்றுக்கொள்ளலாம். பிற்கொடுப்பனவு வெற்றியாளர்கள் தங்களின் பிற்கொடுப்பனவு பில்லில் குறித்த பெறுமதிக்கான ஒரு விலைக்கழிவைப் பெற்றுக்கொள்வர். கேஷ் பொனான்ஸா வெற்றியாளர்களுக்கு மொபிடெல்லின் வாடிக்கையாளர் சேவை இலக்கமான 071 2755 777 மற்றும் எழுத்து மூலமாக மாத்திரமே அறியத் தரப்படும். வாடிக்கையாளர்கள் வெற்றி கொண்ட பரிசுகள் தொடர்பாக எவ்வித மேலதிக கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *