ரூபா வீழச்சி கண்டாலும் பொருளாதாரம் தள்ளாடவில்லை! – மங்கள கூறுகின்றார்

இலங்கையானது பொருளாதார ரீதியில் சரியான திசையில் பயணிக்கின்றது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற துறைமுகம் மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவிப்புகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வியட்நாம், இந்தோனேசிய ஆகிய நாடுகளின் நாணயத்தின் பெறுமதி குறைவடைந்திருந்தாலும், இந்த நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.

உலகளாவிய பொருளாதாரத்தை நோக்கும்போது வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகின்றது.

கடந்த வருடத்தில் வெளிநாட்டு நாணயத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதன்முறையாக நாட்டின் பிரதான கணக்கில் இருப்பு ஒரு சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளது.

உலகளாவிய பொருளாதாரத் துறையின் நம்பிக்கையை வெற்றிகொள்ள முடிந்துள்ளது. ஏற்றுமதி மேம்பாட்டுக்கு பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *