படுதோல்வியுடன் பரிதாபமாக வெளியேறியது இலங்கை !

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர்களில் 5 தடவைகள் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி, இம்முறை முதல்சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறியது. அபாரமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி தந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷாஜத், இஷானுல்லா ஜோடி சிறப்பான ஆரம்பத்தை வழங்கியது.

மலிங்க, துஷ்மந்த சமீர, திசார பெரோ ஆகியோரின் பந்தை பவுண்டரிக்கு அனுபிய ஷாஜத், அகில தனஞ்ஜேயின் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 57 ஓட்டங்களை சேர்த்த போது தனஞ்சயின் ‘சுழலில்’ ஷாஜத் (33) ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த இஷானுல்லா, திசர பெரேர வீசிய 19ஆவது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். இவர், 45 ஓட்டங்கள் எடுத்திருந்த போது தனஞ்ஜேயின் பந்தில் வெளியேறினார். பொறுப்பாக ஆடிய ரஹ்மத் ஷா அரைச்சதம் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி சார்பில் திசாரா பெரேரா 5 விக்கெடடுகளைக் கைப்பற்றினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

முஜீப் ரஹ்மான் வீசிய முதல் ஓவரில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்தார்.

குல்பதின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தனஞ்செயா டி சில்வா (23) ‘ரன்–அவுட்’ ஆனார். ரஷித் கான் ‘சுழலில்’ குசால் பெரேரா (17) போல்டானார்.

பொறுப்பாக ஆடிய உபுல் தரங்க (36) ஓரளவு கைகொடுத்தார். ஷேஹன் ஜெயசூர்யா (14) ‘ரன்–அவுட்’ ஆனார். முகமது நபி ‘சுழலில்’ சிக்கிய அணித்தலைவர் மெத்யூஸ் (22) நிலைக்கவில்லை.

இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஏற்கனவே வங்கதேசத்திடம் வீழ்ந்த இலங்கை அணி, தொடர்ந்து 2ஆவது தோல்வியை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து ‘பி’ பிரிவில் இருந்து வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘சூப்பர்–4’ சுற்றுக்குள் நுழைந்தன.

அபாரமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் இலங்கைக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை இவ்விரு அணிகள் 3 முறை மோதின. இதில் இலங்கை 2 (2014, 2015), ஆப்கானிஸ்தான் ஒரு முறை (2018) வெற்றி பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *