வடக்கு அரசியல் தலைவர்கள் பற்றி பேச ஆளுநருக்கு அருகதை இல்லை! – சிறிதரன் எம்.பி. சாட்டையடி

“இலங்கையின் மத்திய மாகாணத்திற்குச் செல்ல முடியாதவாறு சமூக அடிப்படையில் விரட்டியடிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு வடக்கு மாகாண அரசியல் தலைவர்கள் பற்றிக் கதைப்பதற்கு அருகதை இல்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

கரைச்சி பிரதேசசபையின் கந்தபுரம் இலத்திரனியல் நூலகத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தெற்கில் வாழும் சிங்களவர்களைத் திருமணம் செய்தமை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி போன்ற இடங்களில் இந்துக் கோவில்கள் அமைத்து தமிழர்கள் வழிபடுகின்றமை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இராணுவ இரத்தம் ஓடுகின்றது, தமிழர்களிடம் இனபேதம், சாதி பேதம், குலபேதம் இருக்கின்றது என்றெல்லாம் வடக்கு ஆளுநர் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *