ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி, மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துவருகின்றது.
மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 165.1490 ரூபாவாக வரையறுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி161.8174 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு, தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவது இதுவே முதன்முறையாகும் என கூறப்படுகின்றது.