வகுப்பறைக்குள் அடிதடியில் ஈடுபட்ட ஆசிரியைகள்! – கொட்டகலையில் கொடூரம்

Asian women fight and pull hair.

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இரு ஆசிரியைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் திம்புள்ள, பத்தனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை நேரத்திலேயே வகுப்பறையொன்றில் மாணவர்களுக்கு முன்னிலையில் சினிமாப்பாணியில் இவருவரும் மோதிக்கொண்டுள்ளனர் என்றும், தகாக வார்த்தைகளைப் பயன்படுத்தி சொற்போரில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியைகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நுவரெலியா வலயக்கல்வி அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இருவருமே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதால் பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன. எதற்காக இந்த மோதல் இடம்பெற்றது என்பது குறித்த தகவல் இன்னும் கசியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *