கண்டி மாநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நிகழ்வில் ஓ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 2 ஆம் நூற்றாண்டு ஆரம்பவிழா மிகவும் பிரமாண்டமானமுறையில் நேற்று கண்டி மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் – இறுதிநேரத்தில் பயணம் கைவிடப்பட்டது.
கண்டியில் பிறந்து – தமிழகம் சென்று பின்னர் சினிமாவிலும், அரசியலிலும் உச்சம் தொட்ட தமிழகத்தின் மறைந்த முதல்வர் அமரர். எம்.ஜி.ஆரின் இரண்டாம் நூற்றாண்டு ஆரம்பவிழாவை பிரமாண்டமாக நடத்துவதற்குத் திட்டம் வகுத்திருந்த விழாக்குழு, தமிழகத்தின் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிதியாக அழைத்திருந்தது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முக்கிய பிரமுகர்களாக அறிவிக்கப்பட்டிருந்தவர்கள் நிகழ்வில் பங்கேற்காதது குறித்து பலகோணங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார்.
தமிழக துணை முதல்வரின் கண்டிப் பயணத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எதுவும் காட்டப்படவில்லை. இருந்தும் அவர் வராதது குறித்து பலகோணங்களில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இரு நாடுகளினதும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலா ஓ.பி.எஸ்.ஸின் பயணம் தடைபட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.