SLIM NASCO விருதுகள்- 2018 : ஐந்து விருதுகளை தனகாக்கியது செலான் வங்கி!

SLIM NASCO விருதுகள்- 2018 இல் செலான் வங்கியின் இளம் விற்பனை செயலணிக்கு ஐந்து விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு வருடங்கள் நிரம்பிய விற்பனை செயலணி, முன்னிலையாளர்கள், விற்பனை அதிகாரிகள் மற்றும் விற்பனை உதவி பிரிவுகளில் இரு தங்கம், இரு வெள்ளி மற்றும் வெண்கல விருதை தனதாக்கியிருந்தது.

செலான் வங்கியின் வெற்றி தொடர்பில் செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,

“எனது அணி தொடர்பில் அதிகம் பெருமையடைவதுடன், இத்தருணத்தில் அவர்ளுக்கு மீண்டுமொரு தடவை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டின் SLIM NASCO  விருதுகள் 2018 இல் ஐந்து விருதுகளை வென்றுள்ளமை தொடர்பில் பெருமையடைகிறோம்.

இந்த விருதுகள் எமது வாடிக்கையாளர்களுக்கு எம் இளம் விற்பனை செயலணியினர் காண்பிக்கும் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு போன்றவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எமது விற்பனை செயலணி சுமார் 18 மாதங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது.

சந்தைப்படுத்தல் தேசிய அமைப்பினால் அவர்கள் கௌரவிக்கப்படுகின்றதை காண்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், எமது ஊழியர்களை ஊக்குவித்து, அவர்களின் எதிர்கால தொழில் வாழ்க்கைக்கு அவசியமான பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கிறோம். இந்த விருதுகளினூடாக, சாதாரண நிலைக்கு அப்பால் சென்று, இலங்கையின் வங்கியியல் சேவைகள் துறையில் சிறந்த நிலையை எய்துவதற்கு எம்மை தூண்டியுள்ளது” என்றார்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், வங்கியியல் துறை முன்னிலையாளருக்கான தங்க விருது, தரிகா தில்ஷானி (கடன் அட்டை விற்பனை) அவர்களுக்கு வழங்கப்பட்டது. வெள்ளி விருதை திலினி சமிந்த (தனிநபர் கடன் விற்பனை அணி) பெற்றுக் கொண்டார். விற்பனை அதிகாரிகள் பிரிவில் மாலென் காபந்துகம (வீட்டுக் கடன் விற்பனை) தங்க விருதை பெற்றுக் கொண்டதுடன், வெண்கல விருதை பிரஜானி பீரிஸ் (தனிநபர் கடன் விற்பனை) பெற்றுக் கொண்டார். இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விற்பனை உதவி பிரிவில் வெள்ளி விருதை ஹிரந்தி கசுந்தரி பெற்றுக் கொண்டார்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற இலங்கை கோல்டன் குளோப் டைகர் விருதுகள் 2018 இல், செலான் வங்கி ஐந்து விருதுகளை தனதாக்கியிருந்தது. மேலும், தனது 30 வருட சேவையை பூர்த்தி செய்யும் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தனது செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு SLIM NASCO விருதுகள் வழங்கும் நிகழ்வில் இலங்கையின் 22 துறைகளைச் சேர்ந்த விற்பனை நிபுணர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. சிறப்பாக செயலாற்றும் விற்பனை ஊழியர்களுக்கு அவர்களின் முயற்சி மற்றும் சாதனைகளை தேசிய மட்டத்தில் கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.

SLIM பற்றி

இலங்கையில் சந்தைப்படுத்தலுக்கான தேசிய அமைப்பாக இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) திகழ்கிறது. சந்தைப்படுத்தல் சிறப்பை ஊக்குவிப்பதுடன், 1970ஆம் ஆண்டு முதல் சந்தைப்படுத்தலின் நிலையை மேம்படுத்தி வருகிறது. இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் அங்கத்துவ அமைப்பாக SLIM திகழ்வதுடன், இலங்கை நிபுணர்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் அங்கத்துவத்தையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *