எம்.ஜி.ஆர். பிறந்த மண்ணில் காலடி வைப்பதே பெருமை! கண்டி மண் புகழ்பாடுகிறார் தமிழக அமைச்சர்

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்~hவுடன் அடுத்தவாரம் தமிழக முதல்வர் பேச்சு நடத்துவார் என்று தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் இன்று (16) நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 10.00 மணிக்கு இதயக்கனி நாளிதழின் ஆசிரியர் எஸ்.விஜயன் ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர் தொடர்பான புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றது.

கண்காட்சியை இந்திய தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மத்திய மாகாணமுதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோரும், தமிழ்நாடு சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே தமிழக அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“ மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102 ஆவது பிறந்த தின நிகழ்வூகள் அவர் பிறந்த ஊரான இலங்கையில் கண்டியில் இன்று நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக எங்களுக்கு நல்ல வாய்ப்பு ஒன்றை இலங்கை கல்வித்துறை அமைச்சர் இராதாகிருஸ்ணன் ஏற்படுத்தி தந்துள்ளார்.
இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நூல்கள் வழங்கப்படவுள்ளன. எம்.ஜி.ஆர். பிறந்த ஊரில் நாங்கள் காலடி எடுத்து வைத்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது” எ ன்றும் கூறினார்.

 

க.கிஷாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *