அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடைபெற்ற 6 நாள் சிங்கள மொழி மூலமான பயிற்சி நெறியில் அம்பாறை மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற 63 அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி நெறியின் இறுதிநாள் சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிராந்திய சுகாதார திணைக்களம், ஆயுர்வேத மருத்துவத்துறை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், வைத்தியசாலை, பசு வைத்திய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், வலயக் கல்வி அலுவலகம், உள்ளுராட்சி மன்ற சபைகள் போன்றவற்றில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கே இந்த சிங்கள மொழி மூலமான பயிற்சி வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதிநாள் நிகழ்வின்போது குறித்த பயிற்சி நெறி பற்றிய சீடியும் வழங்கி வைக்கப்பட்டதும் விஷேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *