போரை ஆவணப்படுத்த தனிப்படை அமைத்தார் ஜனாதிபதி!

போரின் ஆரம்பம் முதல் இறுதிக்காலப் பகுதிவரையான அனைத்து சம்பவங்களையும் உரிய வகையில் ஆராய்ந்து ஆவணப்படுத்தும் நோக்கில் புத்தகமொன்றை எழுதுவதற்காகத் தனிப்பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

“போர்க் காலத்தின்போது படைத்தளபதிகளிடையே முரண்பாடுகள் இருந்திருக்கலாம். ஓய்வுபெற்ற பின்பும் அது தொடர்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறித்து இன்று இராணுவ அதிகாரிகள் புத்தகம் எழுதுகின்றனர். இதில் எழுதுபவர்தான் நாயகனாக சித்தரிக்கப்படுகின்றார்.

முப்படைகளிலும் பணியாற்றிய ஓய்வுபெற்ற தளபதிகளை அண்மையில் அழைத்துப் பேச்சு நடத்தினேன். உள்நாட்டுப் போர் தொடர்பான ஆவணப்படுத்தல் ஏதும் இருக்கின்றதா எனக் கேட்டேன். அவ்வாறு எதுவும் இல்லை எனக் கூறினர். இன்னும் நூறூ ஆண்டுகளுக்குப் பின்னர் போர் பற்றி கேட்டால் உண்மையான தகவல் எதுவும் இருக்காது.

எனவேதான் போரின் ஆரம்பம் முதல் இறுதி வரையான காலப்பகுதி தொடர்பில் ஆராய்ந்து ஆவணப்படுத்தல் புத்தகமொன்றை எழுதுவதற்காக த் தனிப்பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு  இரண்டு பலக்கலைக்கழகங்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *