AIA இன்ஷூரன்ஸின் மருத்துவப் பிரசோதனை!

அநுராதபுர மக்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான, சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுவதாக AIA இன்ஷூரன்ஸ் அவர்களுக்கு அண்மையில் வாக்குறுதி அளித்திருந்தது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி வழங்குநராகிய AIA, ‘ஆசிரி சேர்ஜிகள்’  வைத்தியசாலையுடன் இணைந்து எஹெடுவௌ மஹா வித்தியாலயத்தில் சுகாதார வைத்திய முகாம் ஒன்றைச் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் சுமார் 200 பாடசாலை மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள், மற்றும் அப்பாடசாலையைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் ஒரு நாள் வைத்திய முகாமில் அவர்களது ஆரோக்கியப் பரிசோதனைகளுக்காகவும், சுகாதார மற்றும் உடல்நல ஆலோசனைகளுக்காகவும் வருகை தந்திருந்தனர்.

இப்பிரதேசத்தில் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் அதிகமாகக் காணப்படுவதனால், சீறம் கிரியாட்டினைன், மற்றும் சிறுநீர் நுண் அல்புமின் போன்றவற்றை அடையாளப்படுத்துவதற்கான மருத்துவப் பரிசோதனைகள், உடல் சோதனைகள் போன்றன மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மேலும் இப்பிரதேசத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே பாரதூரமான மருத்துவப் பிரச்சினைகள் வயது வந்தவர்களிடத்திலும், சிறுவர்களிடத்திலும் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கு அவசியமான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஆலோசனைகளும் அங்கு வழங்கப்பட்டிருந்தன.

முகாமில் கலந்து கொண்ட வைத்தியர்கள் இப்பிரதேச மக்களுக்காக உடற்பயிற்சி, தேகாரோக்கியம், சிறந்த சுகாதாரமான பழக்கங்களுக்கான ஆலோசனைகள்; மற்றும் திட்டமிடல், மகிழ்ச்சியாக இருத்தல் போன்றவற்றுக்கான குறிப்புகள்,

அத்துடன் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக, ஆரோக்கிய வாழ்க்கை முறை, மற்றும் சிறந்த உணவுப் பழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்திருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *