UBER Eats app இம்மாதம் முதல் கொழும்பில்

சுவைமிகு உணவு வகைகளை விரும்பும் மக்களை அவர்களது உணவு வகைகளுடன் இணைக்கும் முகமாக, உலகம் முழுவதும் போக்குவரத்தின் சுயரூபத்தை மாற்றியமைக்கும் ridesharing app ஆகிய ‘ஊபர்’ கொழும்பில் ஊபர் ஈற்ஸின் ஆரம்பம் பற்றி இன்று அறிவித்துள்ளது.

கோரிக்கைக்கு ஏற்ப உணவு வகைகளை விநியோகம் செய்யும் உலகின் மிகப் பெரிய App ஆகிய இது, உணவு வகைகள் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவை நம்பகமான முறையில் தம்மிடம் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கும் வகையில் கொழும்பில் செப்டம்பர் 17 ஆம் திகதி நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது.

வாடிக்கையாளர்கள் Uber Eats app இப்போது பதிவிறக்கம் செய்து ‘Notify Me’ இனைத் தெரிவு செய்வதன் மூலம் செயற்பாடுகளின் ஆரம்பத்தை அறிந்துகொள்ளலாம்.

இப்போது 150 க்கும் மேற்பட்ட உணவகங்கள் இதில் இணைந்துள்ளன. இப்போது ஹார்போஸ், இஸ்ஸோ, பட்டர் புட்டிக், பாண் பாண், கெபே நுகா, சுஷி காய், சொக்கோஹொலிக்ஸ் போன்ற கொழும்பின் மிகவும் விரும்பத்தக்க உணவகங்கள் வெறுமனே கிளிக் செய்வதன் மூலம் விருப்பமான உணவு வகைகளை வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து தருகின்றன.

Uber Eats, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, சினமன் காட்ன்ஸ் மற்றும் பொறளை ஆகிய நகர்ப் பகுதிகளில் செயற்பட்டு வருகிறது.

‘சர்வதேச ரீதியில் எமது நிறுவனத்தின் விஸ்தரிப்புக்கு, கொழும்பு நகரில் நாம் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது ஒரு முக்கிய அம்சமாகும். Uber rides சுமார் மூன்று வருட காலமாக கொழும்பில் செயற்பட்டு வருகிறது. உங்களுக்குத் தேவையான உணவு வகைகளை வீட்டு வாசலுக்கே கொண்டு வலும் அளவிற்கு இப்போது எமது சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன”.

இந்த நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட ஊபர் ஈற்ஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் பாவிக் ரதொட்,

“கொழும்பில் வாழும் மக்களுக்கு பல்வேறு சிறந்த உணவகங்களின் படைப்புக்களை மிகப் புதிய தொழில்நுட்பத்துடன் Uber விநியோக வலையமைப்பின் ஊடாக வெறுமனே ஒரு App இன் மூலம் பெற்றுக்கொடுக்க நாம் தயாராகி வருகின்றோம்.

எதிர்காலத்தில் பல்வேறுபட்ட உணவு வகைகளை Uber speed மூலம் புதிய பொருளாதார வாய்ப்புகளுடன் விநியோகப் பங்காளிகளுடன் இணைந்து பல்வேறு உணவகங்களின் உற்பத்திகளை எமது வாடிக்கையாளர்களுக்கு எந்த இடத்திலும், எப்போதும் சிரமமின்றி பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.” என்று கூறினார்.

Uber Eats மூலம் வாடிக்கையாளர், உணவக உரிமையாளர் மற்றும் விநியோகப் பங்காளிகள் நன்மைபெறும் முறைகள் –

வாடிக்கையாளர் – புதிய உணவு வகைகள் பற்றி வாடிக்கையாளர் அறிந்து கொள்ளவும், அவர்களது நகரத்தில் காணப்படும் உணவு வகைகள் பற்றி அறிந்துகொள்ளவும் Uber Eats வாய்ப்பு அளிக்கிறது.

Uber Eats ஊடாக ஒரு கோரிக்கையை முன்கூட்டியே பதிவுசெய்ய முடியும். சிறந்த உணவு வகைகளை இலகுவாகக் கண்டறிந்து, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலும், விநியோகத்தைக் கோருவதன் மூலம் பாவனையாளர்களுக்கு அவர்களது உணவு கடந்து வரும் பாதையை அறிந்து கொள்ளவும், அவர்களின் வீட்டு வாசலுக்கே உணவு வந்து சேரும் என்ற நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

முதல் கட்டமாக Uber Eats அனைத்து உணவு விநியோகங்களையும் App மூலம் இலவசமாக மேற்கொள்கிறது.

உணவகப் பங்காளிகள் – உள்நாட்டு உணவகங்கள் Uber Eats ஊடாக, புதிய வாடிக்கையாளர்களை அடைந்து கொள்ளவும், தமது உணவு வகைகளை இலகுவாக விநியோகம் செய்யவும் முடிகிறது. மேலும், இந்த தளம் ஊடாக உணவகங்களுக்கு பல்வேறு தரவுகள் கிடைக்கின்றன. தமது வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளவும், சேவைத் தரம், வாடிக்கையாளர் திருப்தி என்பனவற்றை அறிந்து, விற்பனைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களைச் செய்யவும் இது உதவியாக அமையும்.

விநியோகப் பங்காளிகள் – Uber Eats மூலம் விநியோகப் பங்காளிகளுக்கு நெகிழ்வான, நம்பகமான வருமானம் பெற்றுக்கொடுக்கப்படுகிறது. விநியோகப் பங்காளிகள் தேவையான தருணங்களில் தொழில் புரிவார்கள். உணவு வகைகளை மோட்டார் சைக்கிள்கள் மூலம் விநியோகம் செய்வார்கள்.

Uber Eats ஐப் பயன்படுத்துவது மிகவும் சுலபம் –

1. Uber Eats app ஐப் பதிவிறக்கம் செய்யவும்.

2. விநியோகிக்கப்பட வேண்டிய இடத்தைத் தெரிவு செய்யவும் – உங்கள் உணவு கிடைக்கப்பெற வேண்டிய இடத்தின் முகவரியை இதில் பதிவு செய்யவும்.

3. உங்களுக்கு மிகப் பொருத்;தமான உணவைத் தெரிவு செய்யவும் – அருகிலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு வகைகளை App இல் பார்வையிட்டு, அவற்றின் விலை, போஷாக்கு உள்ளடக்கம், விநியோகம் செய்யப்படும் வேகம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தவும்.

4. உங்களது கோரிக்கையைப் பதிவு செய்யவும் – உங்கள் உணவு வகையை உடனடியாகவோ அல்லது பிந்திய ஒரு நேரத்திலேயோ பெற்றுக்கொள்ள முடியும்.

5. கொடுப்பனவை மேற்கொள்ளவும் – கிரெடிட் ஃ டெபிட் அட்டைகள் மூலம் அல்லது உணவை பெற்றுக்கொள்ளும் போது பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.

6. உங்கள் உணவின் வருகையைப் அவதானிக்கவும் – உங்கள் உணவு தயாரிக்கப்படல் மற்றும் அது கடந்து வரும் பாதை என்பனவற்றை நேரலையாக அது உங்களை வந்தடையும் வரை நீங்கள் அவதானிக்கலாம்.

Uber Eats பற்றி
Uber Eats 2014 ஆம் ஆண்டில் லொஸ்-ஏஞ்ஜலிஸ் நகரில் பரீட்சார்த்த நடவடிக்கையாக சிறிய முறையில் ஆரம்பிக்கப்பட்டது.

2015 டிசம்பர் அளவில் தனியானதொரு App ஆக டொரொன்டோவில் செயற்பட்டது. அன்று முதல் அது துரிதமாக வளர்ந்து வந்து 200 க்கும் மேற்பட்ட சர்வதேச நகரங்களை உள்ளடக்கி ஒரு தனிப்பட்ட App ஆக செயற்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *