கொரோனா வைரஸை விரட்டும் ஆவிப்பிடி வைத்தியம்!

நம் பாரம்பரிய வைத்தியத்திற்கு மறுபடியும் கொரோனா பின்விளைவால் மதிப்பு கூடியிருக்கிறது.

சித்த மருத்துவம் என்றாலே ஒரு மாதிரி மங்கலாகப் பார்க்கும் பார்வையில் தெளிவு வந்திருக்கிறது. இயற்கை உணவு பற்றிய விழிப்பும் ஓரளவுக்கு வந்திருக்கிறது.

காரணம் பட்டறிவு தான்.

முருங்கையின் மகிமையை கியூபாவைப் போன்ற நாடுகள் உணர்ந்த நிலையில், முருங்கைக் கீரை, காயின் மகிமையைச் சற்றுத் தாமதமாகத் தான் உணர்ந்திருக்கிறோம்.

ஆங்கில மருந்துக் கடைகளில் கூட கபசுரக் குடிநீரும், நில வேம்புக் குடிநீரும் பாகுபாடில்லாமல் விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன.

கொரோனாத் தொற்று ஏற்பட்டுச் சித்த வைத்தியம் பார்த்தவர்கள் பிரச்சினை முற்றாமல் தேறி வந்திருக்கிறார்கள். யாருக்கும் உயிரிழக்கும் ஆபத்து நேரவில்லை.

சித்த வைத்தியச் சிகிச்சை என்கிற பெயரில் ஆங்கில மருத்துவர்களைப் போல யாரும் ‘கல்லா’ கட்டவில்லை.

இஞ்சியும், மிளகும், எலுமிச்சையும், சீரகமும், வேப்பிலையும், துளசியும் அன்றாடப் பயன்பாட்டில் சற்றுக் கூடுதலாகச் சேர்ந்திருக்கின்றன.

யோகாவைச் செய்யப் பழகாதவர்களும் பழகிக் கொண்டிருக்கிறார்கள். மூச்சுப் பயிற்சிக்கு மவுசு கூடியிருக்கிறது.
அதே காற்று தான். பயிற்சியின் மூலம் சற்றுச் சீராக உடலுக்குள் போய் வருகிறது.
ஏறத்தாழ ஓப்பீட்டளவில் மற்ற நாடுகள விட, இறப்பு விகிதம் நம் நாட்டில் குறைவு என்று சொல்லப்பட்டாலும், கொரோனா பரவத் துவங்கியதுமே – ஆயுர்வேதம், சித்தா என்று இங்குள்ள பாரம்பரிய மருத்துவ முறையை முதலிலேயே அமல்படுத்தியிருக்கலாம்.
அப்படி அமல்படுத்தியிந்தால், மக்கள் நலத்தில் அக்கறை காட்டியிருந்தால், சாதாரண குடிமக்கள் துவங்கி, மாண்புமிகு மத்திய, மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், ஆன்மீகவாதிகள், பதவிசாகத் தற்காத்து வாழுவதாகச் சொல்லும் பிரபலங்கள் உள்ளிடவர்கள் ‘சமூகப் பரவல்’ என்ற பதத்தைப் பயன்படுத்தாமலேயே பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

முன்பெல்லாம் யாருக்காவது ‘ஜலதோஷம்’, நம்மூர் மொழியில் ‘தடுமன்’ பிடித்தால், நல்ல அகன்ற சட்டியில் வெந்நீரைக் கொதிக்க வைத்து, கனமான போர்வையைப் போர்த்தி ஆவி பிடிப்பாது இயல்பாக நடந்து கொண்டிருந்த பழக்கம் தான். ஆனால் இளைய தலைமுறையினரில் பலரால் அதை ஏற்கமுடியவில்லை.

ஆனால் அதைத்தான் ‘ஸ்டீம் தெரபி’ என்று நவீன அழகுச் சிகிச்சையின் ஒரு பகுதியாக்கிக் காசு பிடுங்கியபோது, அதே இளைஞர்கள் சத்தமில்லாமல் ஆவிக்கு முகம் காட்டிக் காசைக் கொடுத்துவிட்டு வந்தார்கள்.

கொரோனா பரவியதும் அதற்கு மறுபடியும் கிராக்கி வந்தது. ஆவி பிடிக்க என்றே தனிக்கருவிகள் எல்லாம் கூடுதலாக விற்பனை ஆகின.

மும்பையில் இதற்காகவே ஒரு ஆய்வும் நடந்திருக்கிறது. கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை ‘ஆவி’ பிடிக்க வைத்துப் பார்த்து, அவர்கள் நீராவியை மூச்சின் மூலம் உள்ளிழுத்து உடலில் ஊருவதின் மூலம் நல்ல மாற்றங்கள் நடப்பதை உறுதிப்படுத்தி அறிவிக்கவும் செய்திருக்கிறார்கள்.

‘ஸ்டீம் தெரபி’ சக்சஸ் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்காகச் சிகிச்சை மையங்களுக்கு ஓடி நீராவி பிடிக்க வேண்டியதில்லை.

அதைவிட, பழைய காலத்தில் போட்டோ எடுப்பவர்கள் ஸ்டாண்டில் நிற்கும் காமிராவின் கோணத்தைச் சரி செய்து, தன்னைக் கறுப்புப் போர்வையில் மறைத்துக் கொள்வதைப்போல, அதே மாதிரிக் கௌரவக் குறைச்சல் பார்க்காமல், தனக்குத்தானே ‘சால்வை’ போர்த்தியதைப் போல, போர்வை போர்த்தி நிம்மதியாக வீட்டிலேயே ‘ஆவி’ பிடித்து மூச்சை இழுத்து விட்டுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *