மலையக முஸ்லிம் கவுன்சில் சென்தில் தொண்டமானுக்கு ஆதரவு

மலையக முஸ்லிம் கவுன்சில், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட வேட்பாளர் செந்தில் தொண்டமானை ஆதரிக்க மலையக முஸ்லிம் கவுன்சில் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திலோ, மாகாண சபையிலோ பிரதிநிதித்துவமொன்றை பெறாத பதுளை மாவட்ட முஸ்லிம்களின் சமூக பாதுகாப்பிற்காகவும், எதிர்கால சவால்களை ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டு, தீர்வுகளைப் பெற்றுத்தரும் வகையில் இம்முறை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவளித்து செயற்படுவதாக மலையக முஸ்லிம் கவுன்சில் அறிவித்துள்ளது.

தற்போது செந்தில் தொண்டமான், இந்நாட்டின் பிரதமரின் இணைப்புச் செயலாளராகவும், .இ.தொ.கா.வின் உப தலைவராகவும் இருந்து கொண்டு கடந்த காலங்களில் பல பாரிய சேவைகளை செய்து வந்துள்ளார். குறிப்பாக இதுவரை காலமும் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றிராத இவர் முஸ்லிம் சமூகம் சார்ந்த பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நகர்வுகளை நோக்குகையில் சிறுபான்மை சமூகங்கள் ஆளும் அரசாங்கத்தின் ஆதிகாரமிக்கதொரு பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கிறது.

அந்த வகையில் நோக்கும்போது, நடைபெறவிருக்கும் தேர்தலுக்குப் பின், ஸ்திரமானதொரு ஆட்சியமைக்கும் கட்சியின் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரெயொரு சிறுபான்மையின வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் தொண்டமான், வெற்றியில் பங்காளிகளாக ஆகுவதற்காக பதுளை மாவட்ட உலமாக்கள், புத்திஜீவிகள், தமது பேராதரவை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. ஆகவே, இந்த விடயத்தில் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் சார்பாக மலையக முஸ்லிம் கவுன்சில் பூரணமாக அர்ப்பணித்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *