இலங்கையில் ஆயிரம் சிப்பாய்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அதில், கடற்படையினர் 540 பேரும் ஏனைய படைகளைச் சேர்ந்தவர்கள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறு அடையாளாம் காணப்பட்ட கடற்படையினரில் பெரும்பாலானோர் வெலிசர கடற்படை முகாமில் கடமையில் இருந்தவர்கள் அல்லது அங்கு தங்கயிருந்தவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், அந்த கடற்படை முகாமிலிருந்த மேலும் 1000 சிப்பாய்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த செயற்பாடு, நேற்றும் நேற்றுமுன்தினமும் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்காமல் இருப்பதை தடுக்கும் வகையிலேயே அந்த கடற்படை முகாமிலிருந்து 1000 சிப்பாய்கள் ஒரே நேரத்தில், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படையினர் ஒருவருக்கு ஒருவர் நெருங்கி பழகுவதை தடுத்துக்கும் வகையிலும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *