தூக்கத்தில் சில சமயங்களில் கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

தூக்கத்தில் சில சமயங்களில் திடீரென்று கீழே விழுவது போன்ற உணர்வோ அல்லது கை கால்களை உதறிக்கொண்டு விழித்துக்கொள்வது போன்ற உணர்வோ ஏற்படுவது ஏன்? இது எதனால் உருவாகிறது?

இவ்வாறு ஏற்படும் நிகழ்விற்கு ஆங்கிலத்தில் ஹைப்நிக் ஜெர்க் – HYPNIC JERK (HYPNAGOGIC JERKS) என்று சொல்வார்கள்.இது உறக்கத்தின் தொடக்கத்திலும் வரலாம் ஆழ்ந்த உறக்க நிலையிலும் வரலாம்.உயரத்தில் இருந்து கிழே விழுவது போன்றோ! எதோ ஷாக் அடித்தது போன்றோ! உணர்வு ஏற்படும்.
ஹைப்நிக் ஜெர்க் ஏன் ஏற்படுகிறது என்று உண்மையான காரணம் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.ஆனால் உறங்கும் சிறிது நேரம் முன்னர் காஃபின் வகை பானங்கள் அருந்துவதலோ , உடற்பயிற்சி செய்வதலோ இது ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிக மனஅழுத்தம் உள்ள வாழ்க்கை முறையில் வாழ்பவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமாத்திரை எடுப்பதை வழக்கமாக வைதிருப்பவர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும்
ஒரு மனிதன் தூங்கும்போது ஒவ்வொரு நிலையாகத்தான் நல்ல உறக்கத்திற்கு செல்ல முடியும். அவனது மூளையின் மற்ற பகுதிகளைவிட ஒருபகுதி மட்டும் வேகமாக அடுத்த நிலைக்கு செல்லும் போது இந்த HYPNIC JERK நடக்கிறது.இது ஏற்பட்ட பின் சிலரால் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து தூங்க முடியும் வேறு சிலருக்கு அதன் பின்னர் தூங்க வெகு நேரம் பிடிக்கும்.
இது அடிக்கடி ஏற்பட்டால் அது ஒரு தூக்க நோயாக மாற வாய்ப்புள்ளது மருத்துவரை சந்திப்பது நலம். மற்றபடி இது ஒரு சாதாரண விஷயம்தான் பயப்பட வேண்டியதில்லை.
பகல் நேரங்களில் தூங்கும் போதும், பேருந்து பயணங்களிலும் நான் இதனை பல முறை நான் அனுபவித்திருக்கிறேன்.
இரவு தூங்கும் முன்னர் காஃபி எடுத்துக்கொள்ளவேண்டாம் உங்கள் உடற்பயிற்சி நேரத்தை காலையில் வைத்துக்கொள்ளவும் தூங்கும் முன்னர் தியானம் செய்வது மனதிற்கு இதமான இசையை கேட்பதன் மூலமும் இது வராமல் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *