கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் என்ன நினைக்கிறீர்கள்?


                       
கொரோனா காலத்தில் வீடுகளுக்குள் ஒடுங்கியிருக்கும் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? – இப்படியொரு தேடல் நடந்திருக்கிறது.
நடத்தியது கோவாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.
சில நூற்றுக்கணக்கானவர்களிடம் சாம்பிளுக்கு எடுக்கப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு என்ன சொல்கிறது தெரியுமா?

வீடுகளுக்குள் அடங்கியிருக்கிறவர்கள் தங்களுக்குச் சிறு அறிகுறிகள் தென்பட்டாலும், பதறிப் போகிறார்கள். தங்களைப் பரிசோதித்துக் கொள்கிறார்கள்.
ஐம்பது சதவிகிதம் பேர் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய நேரத்தைச் செலவழிக்கிறார்கள்.
இதனால் செல்போன் மற்றும் நெட் சேவைகளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.
கொரோனா பற்றி ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் அவர்களுக்குப் போரடித்து விட்டன.

தொடர்ந்து கொரோனா செய்திகளைப் பார்ப்பதால் மன அழுத்தமும் ஏற்பட்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் வரும் பரபரப்புச் செய்திகளில் உண்மையில்லாத செய்திகளைப் புறந்தள்ளவும் அவர்கள் தற்போது பழகியிருக்கிறார்கள்.

41 சதவிகித மக்கள் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்கிறார்கள்.
57 சதவிகம் பேர் தியானத்தில் ஈடுபடுகிறார்கள்.
சர்வே பண்ணியதில் – 82.25 சதவிகிதம் பேர் தங்களைப் பற்றிக் கவலைப் படுவதைவிட, தாங்கள் நேசிக்கிறவர்களின் ஆரோக்கியம் பற்றித் தான் அதிகம் கவலைப் படுகிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *