இந்தியாவில் மற்ற கட்டிடங்களைவிட தாஜ்மஹால் ஏன் மிகச் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது?

தாஜ்மஹால் நம் அனைவராலும் “காதல் சின்னம் “என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மற்ற கட்டிடங்களை காட்டிலும் சிறப்பு வாய்ந்தது ஏனெனில்,
இந்தஅழகிய கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு கிபி 1632 லிருந்து 1653 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிடும்.
அதோடு மட்டுமில்லாமல் தாஜ்மஹால் கட்டுவதற்கு ஷாஜகான் 20 முதல் 22 ஆயிரம் வேலையாட்களை பயன்படுத்தினார். மேலும் அதை கட்டுவதற்கு தேவையான பொருள்களை பல்வேறு இடத்தில் இருந்து கொண்டு வருவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்த பட்டன.
தன் மனைவி மும்தாஜ் மஹால் இறப்பதற்கு முன்பாக கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் காதலை வெளிப்படுத்த ஷாஜகான் இந்த சிற்பக் கலை வடிவத்தை யமுனை ஆற்றின் நதிக்கரையில் வெளிக்கொணர முற்பட்டார்.

தாஜ்மஹால் ஏன் இவ்வளவு அழகிய தாகத் தோன்றுகிறது என்றால் இதன் கட்டிடக் கலை இந்திய பெர்சிய மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து கலந்து நடையில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும்.
வரலாறு என்ன கூறுகிறது என்றால், தாஜ்மஹாலை கட்டி முடித்த பிறகு, இதே போன்று வேறு ஒரு கட்டிடம் எழுப்பக் கூடாது என்ற காரணத்தினால் இந்த கட்டிடத்தை கட்டிய அனைத்து கலைஞர்களின் விரலையும் ஷாஜகான் மன்னர் வெட்டியதாகக் பலராலும் கூறப்படுகிறது.ஆனால் இதுவரைக்கும் சரியான வரலாற்று பதிவு கிடைக்கவில்லை.

இந்த கட்டிடத்திற்கு என்றே பிரத்யேகமான பளிங்கு மார்பிள் கற்கள் ராஜஸ்தான், திபெத் & சீனா போன்ற பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆக்ராவில் வடிவமைக்கப்பட்டது.
அப்போதைய காலகட்டத்திலேயே இதை கட்டி முடிப்பதற்கு 32 மில்லியன் ஆகிற்று. இப்போது அதன் மதிப்பு 1062834098 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

நீங்கள் தெளிவாக பார்த்தீர்களென்றால் தாஜ்மஹாலின் அருகே உள்ள இருக குவிமுக மண்டபம் போன்ற கோபுரம் இருக்கும். அவை நான்கும் வெளிப்புறமாக சாய்ந்தவாறு கட்டப்பட்டிருக்கும் .இந்த அற்புதக் கலையை எதற்காக வென்றால் ஏதாவது இயற்கை சீற்றத்தினால் அந்த குவி முகை கோபுரம் இடிந்து விழுந்தாலும் தாஜ்மஹாலை சேதப்படுத்த கூடாது என்பதற்காகவே.
தாஜ்மஹால் கட்டிடம் ஆனது குதுப்மினாரை காட்டிலும் உயரமானது. அதாவது தாஜ்மஹால் தரைமட்டத்திலிருந்து 243 அடி ஆனால் குதுப்மினார் 239 அடி மட்டுமே.

மேலும் தாஜ்மஹாலுக்கு முன்பே உள்ள குளத்தில் எப்போதும் ஒரே மாதிரியான மற்றும் குறையாத நீர் அழுத்தத்தை பராமரிப்பதற்காக செம்பு பெட்டகம் பயன்படுத்தப்பட்ட அமைப்பு உள்ளது . இதனால் நீரானது செம்பு பெட்டகத்தில் முதலில் நிரம்பி பிறகு குளத்தை சரியான அளவில் நிரப்பும்.இதன் சிறப்பு என்னவென்றால், இந்த நீரில் முழு கட்டிட பிம்பம் தெரியும்.
பிற்காலத்தில் இஷா முகம்மது என்பவரால் தாஜ்மஹாலில் மேற்கு புறத்தில் ஒரு மசூதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த மசூதி மெக்காவை நோக்கிய படி ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த மசூதியின் உள்ள அனைத்து சுவர்களிலும் புனித குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தாஜ்மஹாலிள் சுமார் பதினாறு அழகிய தோட்டங்கள் உள்ளன. முகலாயர்களின் தோட்டக்கலை பற்றி சொல்லவா வேண்டும் மிகவும் சிறப்பாக தான் இருக்கும்.
மேலும் தாஜ்மஹாலை அழகு சேர்ப்பதற்கு ஏற்றவாறு , தாஜ்மஹாலின் நுழைவாயில் ஏற்படுத்தப்பட்டது. இதுவும் மிகவும் அழகான ஒன்று. இதன் சுவர்கள் வெள்ளியினால் பூசப்பட்ட மெருகூட்டப்பட்ட ஒன்று.
தாஜ்மகாலின் நுழைவாயில் கட்டிடம் மிகவும் தந்திரமான பார்வை அமைப்பைக் கொண்டது. இந்த நுழைவாயிலை நெருங்கி செல்ல செல்ல தாஜ்மகால் முழுவதும் பெரிதாக தெரியும். அதே போல பின்னோக்கி செல்லும் பொழுது தாஜ்மஹால் சிறிதாகி கொண்டே செல்வது போல் தோன்றும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தாஜ்மஹால் 1983 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *