இலங்கையில் ஆடம்பரமில்லாத மனித நேயம் உள்ள மனிதர்

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு சரித்திரம் உள்ளது

ஸ்ரீலங்காவின் மிகப்பெரிய பேஷன் சங்கிலி தொடர்  நோலிமிட் உரிமையாளர் என்.எல்.எம். முபாரக் ஹாஜி தனது 2500 ஊழியர்களுக்கும் ஏப்ரல் சம்பளத்தை எந்தவிதமான விலக்குகளும் இன்றி செலுத்தியுள்ளார். அற்புதமான மனிதர் & மிகப்பெரிய தொண்டு வழங்குநர்.

தெஹிவெள-மவுண்ட் நோலிமிட் ஜும்மா பள்ளியில் நீங்கள் அவரை அடிக்கடி பார்க்க முடியும், அங்கு பள்ளிவாசல்  மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்ற பள்ளிக்கு ஒரு பொது தொழிலாளியாக வேலை செய்கிறார் . இந்த அற்புதமான ஆத்மாக்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்­க­ளுக்கு அதிஷ்­டத்தைக் கொண்­டு­வந்­தது தெஹி­வ­ளை NOLIMIT­காட்­சி­ய­றை­தானே?

‘‘French Corner’ எனது முதல் காட்­சி­யறை. பது­ளையில் இருந்து வந்து எனது தங்கை, மைத்­துனர் ஆகி­யோ­ருடன் இணைந்து அந்தப் பெயரில் புதி­ய­தொரு வியா­பா­ரத்தை ஆரம்­பித்தேன். ஆண் – பெண் – சிறுவர் என சக­ல­ருக்கும் ஏதா­வ­தொரு பெஷன் வகை­ய­றாக்கள் அதில் இருந்­தன. 1992 இல் இருந்து 2005 வரை வியா­பா­ர­மா­னது முன்­னேற்­ற­க­ர­மா­ன­தாக இருந்­தது. அக்­கா­லப்­ப­கு­தியில் சில்­லறை வணிகத் துறையில் பெஷன் மூலம் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது நாமே.

அப்­ப­டி­யாயின் French Corner – NOLIMIT ஆனது எவ்­வாறு?

தங்­கையும் மைத்­து­னரும் வியா­பா­ரத்தை என்­னிடம் ஒப்­ப­டைத்து அவர்­க­ளுக்­கு­ரிய பணத்தைப் பெற்­றுக்­கொண்டு விலகிச் சென்­றனர். நான் புதி­தாக ஆரம்­பிப்­ப­தற்­கான பெயர் குறித்துச் சிந்­தித்தேன். ‘எல்­லை­யற்­றது…’ என்ற அர்த்­தத்தைக் கொண்­டதும் எனது பெயரின் முத­லெ­ழுத்­துக்­களைக் கொண்­ட­து­மான  NOLIMIT என்ற பெயரைச் சூட்­டினேன்.
NOLIMIT  என்­ப­தனுள் உங்­க­ளு­டைய பெயர் எங்­குள்­ளது?
NLM  என்ற சிவப்பு நிறத்­தி­லான மூன்று எழுத்­துக்கள் குறிப்­பது ‘நூஹ் லெப்பை முஹம்மட்’ என்ற எனது தந்­தையின் குடும்பப் பெயர். எனக்கு எப்­பொ­ழுதும் பெயர் உரு­வாக்­கு­கின்­ற­போது பெஷனுக்­க­மைய சிந்­திக்­கின்ற ஒரு பழக்கம் உள்­ளது. கஷ்டப்­பட்டு உரு­வாக்­கிய பெயரைப் போலவே, ஒவ்வோர் ஆண்டும் நான் புதி­தான ஓரி­டத்தை உரு­வாக்­கினேன். எவ்­வா­றெனில், முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ “கம் உதா­வ”யை உரு­வாக்­கி­யதைப் போன்று.

இந்த வியா­பா­ரத்தை எவ்­வ­ளவு மூல­த­னத்­துடன் ஆரம்­பித்­தீர்கள்?

பது­ளையில் ஆரம்­பித்­தது இரண்­டரை இலட்­சங்­க­ளுடன். தெஹி­வளை French Corner ஆரம்­பித்­தது பத்து இலட்­சங்­க­ளுடன். அப்­போது சகல வகை­ய­றாக்­களும் கொஞ்சம் கொஞ்சம் இருந்­தன. விற்­ப­னைக்­கேற்­பவே நான் கொள்­முதல் செய்தேன்.

ஆரம்­ப­கா­லத்தில் நாளொன்­றுக்கு எத்­தனை மணித்­தி­யா­லங்கள் வேலை செய்­தீர்கள்?
சில நாட்­களில் 12 – 14 மணித்­தி­யா­லங்கள் வேலை செய்தேன். கொள்­முதல் செய்­ததும் நான்தான். விற்­பனை செய்­ததும் நான்தான். கணக்கு வழக்­கு­களைப் பார்த்­ததும் நானே. மொத்­தத்தில் சகல வேலை­க­ளையும் நானே செய்தேன்.

வாழ்க்­கையில் பெற்ற மிகப் பெரிய வெற்றி எது?

சிறந்த பிள்­ளைகள் ஐவரைப் பெற்­றமை. மூத்த மகன் ஹாபிஸ். அவர் இந்த வர்த்­த­கத்தின் பணிப்­பா­ளர்­களுள் ஒருவர். இரண்­டா­வது மகன் தீதாத். அவரும் பணிப்­பா­ளர்­களுள் ஒருவர். இவர்கள் இரு­வரும் சிறப்­பாகப் பணி­யாற்­று­கின்­றனர். மூன்­றா­வதும் நான்­கா­வதுமான புதல்­வர்கள் மற்றும் இளைய மகள் ஆகியோர் உயர் கல்­வியைத் தொடர்­கின்­றனர். எனது பிள்­ளைகள் அனை­வரும் சிறந்த முறையில் வளர்க்­கப்­பட்­டுள்­ளனர். உண்­மையில் நான் வியா­பார விட­யங்­களில் பெரும்­பா­லான காலத்தைச் செல­விட்ட போது, எனது மனைவி மக்­கியா, பிள்­ளை­களைச் சிறப்­பாக வளர்த்­தெ­டுத்தார். அவர் சிறந்­த­தொரு தாய் மட்­டு­மல்ல, சிறந்த முறையில் ஊக்­கு­விக்­கக்­கூ­டிய மனை­வி­யும்தான்.

அப்­ப­டி­யெனில் NOLIMIT குடும்ப வர்த்­தகம் ஒன்று?

ஆம். நான், மனைவி மற்றும் பிள்­ளைகள் என்­போரைக் கொண்ட குடும்ப வணிகம். அவர்கள் வணிகம் பற்றி சிறந்த முறையில் சிந்­திக்­கின்­றனர்.

வாழ்க்­கையில் பெற்ற தோல்­விகள் எவை?

பது­ளையில் இருந்த போது நான் விருந்­தகம் ஒன்று நடத்­தினேன். அதில் நட்டம் ஏற்­பட்டு அதனை மூடி­விட்டேன். அதன் பிறகு ஏஜென்சி ஒன்று தொடங்கி அதுவும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. சரி­வ­ராது என எனக்கு விளங்­கினால் அந்த வியா­பா­ரத்தை நான் கைவிட்டு விடுவேன். அதனை நான் தோல்­வி­யாக நினைப்­ப­தில்லை. அதி­லி­ருந்து விடு­ப­டு­வது அதனை விட நிம்­ம­தி­யா­ன­தாகும்.

நீங்கள் சவால்­களை எதிர்­கொள்ள விரும்பும் ஒரு­வரா?

அனேகமானோர் வேண்­டா­மென்று கூறி­ய­போதும் கல்­கிஸ்­ஸ­யி­லுள்ள மயா­னத்­திற்கு எதிரே நான் பெரி­ய­தொரு Glitz காட்­சி­ய­றையைத் திறந்தேன். மயானம் பாழ­டைந்­துள்­ளது என்­ப­தற்­காக எனது வியா­பா­ரமும் பாழ­டைந்­ததா? இல்லை. அத்­த­கைய போலி­யான நம்­பிக்­கைகள் என்­னி­ட­மில்லை. கவர்ச்­சி­க­ர­மாக முன்­வைக்க முடி­யு­மாயின் மயா­னத்­திற்­குள்ளே காட்­சி­ய­றையைத் திறந்­தாலும் வாடிக்­கை­யா­ளர்கள் நாடி வருவர்.

nolimit owner
உங்­க­ளு­டைய பிர­தேசம் கொழும்பா?

இல்லை, காத்­தான்­குடி. பன்­னி­ரண்டு வய­து­வரை நான் அங்­கேயே கல்­வி­கற்றேன். அதன் பின்னர் சாதா­ர­ண­தரம் வரை கொழும்பு சாஹிறாக் கல்­லூ­ரியில் கற்றேன். பாட­சாலை விடு­தியில் தங்­கி­யி­ருந்தேன். விடு­முறை காலங்­க­ளில்தான் வீட்­டுக்குச் சென்றேன்.

சிக்­க­ன­மாக வாழ்­வ­தற்கு அந்தப் பிள்ளைப் பரு­வத்தில் உங்­க­ளுக்குப் பழக்கம் இருந்­ததா?

தந்­தைக்கு மட்­டக்­க­ளப்பில் துணிக்­கடை ஒன்று இருந்­தது. மீண்டும் செல்­கின்ற போது எனது செல­வு­க­ளுக்குப் போதி­ய­ளவு பணம் கிடைத்­தது. அதனால் சொல்­லு­ம­ள­வுக்கு பணப் பற்­றாக்­குறை இருக்­க­வில்லை. குடும்­பத்தில் பிள்­ளைகள் எட்டுப் பேர். அவர்கள் அனை­வ­ரையும் விடு­தியில் தங்­க­வைத்தே தந்தை கற்­பித்­தி­ருந்தார்.

பிள்ளை என்ற வகையில் உங்­க­ளுக்கு இருந்த கனவு – குறிக்கோள் என்ன?

அவ்­வாறு பெரி­ய­ள­வி­லான கன­வுகள் எவையும் இருக்­க­வில்லை. ஆனால், வீட்டில் இருந்­த­போதும் விடு­மு­றைக்குச் சென்று வரு­கின்­ற­போதும் நான் எப்­பொ­ழுதும் தந்­தை­யிடம் கேட்­டது ‘எனக்குக் கொண்­டு­வந்த புதிய விட­யங்கள்’ எவை என்றே. அந்தக் காலத்­திலும் நான் அழ­காக ஆடை­ய­ணிந்தேன். புதிய விட­யங்கள் பற்றி அதிக ஆர்­வமும் ஆசையும் இருந்­தது. அதனால் குறைந்­தது புதிய கைக்­க­டி­காரம் – செருப்பு போன்­ற­வை­சரி எனக்குக் கிடைத்­தன.

சாதா­ர­ண­தரப் பரீட்­சை­யா­னது உங்­க­ளது வாழ்க்­கை­யையும் எதிர்­கா­லத்­தையும் தீர்­மா­னித்­தது எனக் கூறினால்?

நான் பரீட்­சையில் சிறப்­பாகச் சித்­தி­ய­டை­ய­வில்லை. சிறந்த தொழில்கள் எனக்குக் கிடைக்­கா­தென்­பதை நான் புரிந்­து­கொண்டேன். நான் முடி­வெ­டுத்தேன். ஹோட்டல் தொழி­லுக்குச் சென்றேன். இல்­லா­மற்­போன ஒன்­றுக்­காகக் கவ­லைப்­ப­ட­வேண்­டிய தேவை எனக்­கில்லை. இருக்­கின்ற இடத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­கின்ற முறைதான் எனக்கு முக்­கியம்.

உங்­க­ளு­டைய முயற்­சி­மிக்க வாழ்க்­கையை முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு தொலை­தூ­ரத்­தி­லுள்ள கிரா­மத்தின் இளைஞர் யுவ­திகள் இந்த நேர்­கா­ணலின் பின்னர் NOLIMIT மூலம் வாழ்க்­கையை ஆரம்­பிக்க எண்­ணினால் உதவி செய்­வீர்­களா?

ஒவ்­வொரு மாதமும் நாம் ஆட்­சேர்ப்புச் செய்­கின்றோம். தூரப் பிர­தே­சங்­களில் இருந்து வரு­கின்­ற­வர்­க­ளுக்குப் பாது­காப்­பான தங்­கு­மி­டங்­க­ளையும் உண­வு­க­ளையும் வழங்­கு­கின்றோம். கொழும்­புக்கு வந்­தாலும் தவ­றான வாழ்க்­கை­யொன்­றினுள் விழாமல் இருப்­ப­தற்­கா­கவே நாம் அவ்­வா­றான பாது­காப்பை வழங்­கு­கின்றோம். மூன்று வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை பத­வி­யு­யர்­வு­களைப் பெற்று வாழ்க்­கையை வெற்­றி­கொள்­வ­தற்­கான சிறந்த வழி­யொன்று அவர்­க­ளுக்கு உள்­ளது. அதற்கு  உற்­சாகம், அர்ப்­ப­ணிப்பு மற்றும் முயற்சி என்­பவை மாத்­தி­ரமே அவர்­க­ளுக்குத் தேவை.

நீங்கள் வாழ்க்­கையை வாழ்­வது எவ்­வாறு?

மனிதன் என்ற அடிப்­ப­டையில் நான் சிறப்­புடன் வாழ்­கின்றேன். உலகம் பூரா­கவும் செல்­கின்றேன். வைத்­தி­ய­சா­லை­களில் நலன்­புரிச் செயற்­பா­டுகள், தலதா பெர­ஹர அனு­ச­ரணை, சிறுவர் மேம்­பாட்டுச் செயற்­பா­டுகள் போன்ற சகல சம­யத்­த­வர்­களும் இனத்­த­வர்­களும் மகிழ்ச்­சி­ய­டை­கின்ற வகையில் ஒரு நிறு­வனம் என்ற வகையில் எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்றோம். அது எனக்கும் மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது.

உங்­க­ளுக்கு இயற்­கையை இர­சிப்­ப­தற்கு நேரம் இருக்­கின்­றதா?

எனக்கு சீது­வையில் பண்ணை ஒன்று உள்­ளது. அங்கு நான் நீண்ட செவி­க­ளை­யு­டைய ஆடு­க­ளையும் ‘அரொ­வானா’  (Arowanas) வகையைச் சேர்ந்த மீன்­க­ளையும் வளர்க்­கின்றேன். நான் உயி­ரி­னங்­களை நேசிப்­பவன். அவற்றைப் போஷித்து அவை வளர்­கின்ற விதத்தைப் பார்த்து ரசித்து சந்­தோஷம­டை­கின்றேன். நேரம் கிடைக்­கும்­போ­தெல்லாம் நான் அங்கு செல்வேன். பெஷனை நேசிப்­பது போலவே  செடி­கொ­டி­க­ளையும், உயி­ரி­னங்­க­ளையும் நான் நேசிக்­கின்றேன்.

ஆடை­யொன்றை விற்­ற­வுடன் நீங்கள் மகிழ்ச்­சி­ய­டை­வது அதன் இலா­பத்தை நினைத்தா?

இல்லை. எனது காட்­சி­ய­றையின் ஆடை­களை இந்த நாட்­டி­லுள்ள அனை­வரும் அணி­வதைப் பார்க்­கவே நான் விரும்­பு­கின்றேன். வெளி­நா­டொன்றில் ஒருவர் எனது காட்­சி­யறை ஆடையை அணிந்து செல்­வதை நான் கண்டேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்­சியைக் கொடுத்­தது.

புதிய யோச­னைகள் (Ideas) பற்­றிய எண்­ணங்கள் உங்­களை வதைக்­கின்­றதா?

நான் அடிக்­கடி புதி­ய­வற்றைத் தேடு­கின்றேன். பார்க்­கின்றேன். சிந்­திக்­கின்றேன். தரு­விக்­கின்றேன். என்­னைப்­போ­ல­வேதான் எனது குழு­வி­னரும். அவர்­க­ளது புதிய எண்­ணங்­களும் கருத்­துக்­களும் இந்த நிறு­வ­னத்­தினுள் செயல் வடிவம் பெறு­கின்­றன.

முழு நாட்­டிற்கும் பெஷனை வழங்­கிய நீங்கள், பெஷனாக இல்­லையே?

நான் போதி­ய­ளவு பெஷனாக இருந்த ஒருவன். அவ்­வாறு உடுத்­திய பெறு­ம­தி­மிக்க கழுத்­துப்­பட்டி, மேலங்கி, – சேர்ட் ,- காற்­சட்டை – சப்­பாத்து என்­பன வேண்­டி­ய­ள­வுக்கு இருந்­தன. கடந்த நாட்­களில் சுமார் 5000 அள­வி­லான எனது பெஷன் புகைப்­ப­டங்­களை நான் அழித்­து­விட்டேன். எட்டு வரு­டங்­க­ளாக நான் அணி­வது எனது இந்த எளி­மை­யான உடை­யையே. இந்த ஆடையில் அதி­க­ள­வான ஒழுக்கம் இருக்­கின்­றது. நான் தற்­பொ­ழுது விழாக்­களில் கலந்து கொள்­வதும் இந்த ஆடை­யு­டன்தான். இதுதான் எனது அடை­யாளம்.

இல­கு­வா­ன­தெனக் கரு­தியா இந்த ஆடைக்கு மாறி­னீர்கள்?

இப்­போதும் நான் நினைத்த மாத்­தி­ரத்தில் பேரூந்தில் செல்­கின்றேன். நினைத்த மாத்­தி­ரத்தில் முச்­சக்­கர வண்­டி­யிலும் செல்­கின்றேன். எவரும் என்னை அடை­யாளம் காண்­ப­தில்லை. அது எனக்கு மிகவும் சௌக­ரி­ய­மாக உள்­ளது.

உங்­க­ளது வாழ்க்­கையில் தாங்க முடி­யாத கஷ்டம் ஏற்­பட்ட காலப்­ப­குதி நினை­வுள்­ளதா?

இறைவன் எமக்குக் கஷ்டங்­களைத் தரு­வது எம்மைச் சோதித்துப் பார்ப்­ப­தற்­கா­கவே. நாம் அவற்­றுக்கு முகங்­கொ­டுக்க வேண்டும். எனது பாணந்­துறைக் காட்­சி­யறை எரிந்து சாம்­ப­லா­னது. சுமார் 300 மில்­லியன் இழப்பு ஏற்­பட்­டது. நான் கவ­லைப்­ப­டு­வதால் பய­னுள்­ளதா? இறைவன் கொடுத்தான். அவனே எடுத்­துக்­கொண்டான். ஆடை­யின்றி இந்த உல­கத்­திற்கு வந்த நான் நிறை­யவே சம்­பா­தித்தேன். சில நேரங்­களில் அவற்றில் கொஞ்சம் குறைந்­தது. அதனால், ஐயோ! எனக்குப் பிரச்­சினை அதிகம் என கவ­லைப்­ப­டு­வது எதற்கு? அதுதான் வாழ்க்­கையின் நியதி. எந்­த­வொரு கஷ்டகா­லத்­திலும் நடு­நி­லை­யாக இருப்­ப­துதான் முக்­கியம்.

NOLIMIT மற்றும் Glitz என்­பன இந்த நாட்டில் இன்னும் எத்­தனை வரு­டங்­க­ளுக்கு இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்­கின்­றீர்கள்?

அதனைத் தீர்­மா­னிப்­பது வாடிக்­கை­யா­ளர்­களே. நாம் அவர்­க­ளுக்கு பெஷன் பற்றி வழங்­கு­கின்ற ஒரு முற்­ப­கர்வு, வர­வேற்பு, பணத்­திற்­கான பெறு­மானம் மற்றும் கவ­னக்­கு­விவு ஆகியன தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பவர்கள் வாடிக்கையாளர்களே. எனது பணி கவனக்குவிவைச் (focus) செலுத்துவதே. எனக்கு முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் முக்கியமானது கவனக்குவிவுதான்.

தந்தையிடமிருந்து புதல்வர்களுக்குச் செல்கின்ற வர்த்தகத்தினுள் அத்தகைய சிறந்த குணநலன்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுமா?

அதற்காக சரியான நபர்களை, சரியான முறையில் பழக்கப்படுத்திப் பயிற்றுவிப்பது எனது கடமை. Boss என்று ஒருபுறமாக ஒதுங்கியிருக்க என்னால் முடியாது. சிறந்த மனப்பாங்குகளுடன் முன்னோக்கி வருகின்ற அடுத்த சந்ததியொன்று எனக்குத் தென்படுகின்றது என்பதைச் சொல்வதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நீங்கள் சமயத்தைச் சிறப்பாகப் பின்பற்றி வாழ்பவரா?

ஆம். அவ்வாறு இல்லையெனில் மறுவுலகில் நான் இறைவன் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டி ஏற்படும். அதனால் வியாபாரம் செய்கின்ற போதும் நாம் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் இருக்கின்றன. நாம் சம்பாதிக்கின்ற சொத்துக்களில் இருந்து நூற்றுக்கு இரண்டரை வீதம் இந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதனால்தான் எமக்கு மீண்டும் அவை கிடைக்கின்றன.

மீண்டும் பெஷனாக ஆடை அணி வதற்கு நினைத்துப் பார்ப்பதில் லையா?

ஒவ்வொரு நாடுகளினதும் ஷொப்பிங் மோல்களுக்குச் சென்று ஆடைகளைத் தொட்டுப் பார்க்க இன்னும் எனக்கு ஆசைதான். ஆனாலும், அவ்வாறு அழகாக அணிந்து இரசித்த வாழ்க்கைக்கு நான் விடை கொடுத்துவிட்டேன்.

தற்போது உங்களுடைய வயது என்ன?

65. உடல் முதுமையடைந்தாலும் பெஷன் பற்றிய எனது எண்ணங்கள் முதுமை யடையவில்லை. அதனால் வயது எனக்கொரு பிரச்சினையல்ல. மென்மேலும் வேலை செய்யவே நான் விரும்புகின்றேன்.

உங்களுக்குள் இருந்த விளையாட்டு வீரன் எங்கே?

சகல விளையாட்டுக்களிலும் ஈடுபட்ட போதிலும் நீச்சலில் ஈடுபட முடியாமற் போய்விட்டது. நான் தற்போதுதான் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கின்றேன். 65 வயதல்ல, இன்னும் முதுமையடைந்தாலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்வதற்கே நான் விரும்புகின்றேன். அதாவது என்னுள் அந்த விளையாட்டு வீரன் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றான்.

சொல்லுமளவுக்கு உயரமோ பருமனோ இல்லாத ஒருவர். என்றாலும் நீங்கள் உன்னதமான ஒரு பாத்திரம். முதன் முறையாகத்தானே ஊடகம் ஒன்றில் தோன்றியுள்ளீர்கள்?

ஆம். இந்த 25 வருட காலத்திற்கும் எனது புகைப்படம் ஒன்றேனும் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கவில்லை. அவ்விதம் பிரசுரமாவது நான் விரும்பாத ஒன்று. எனினும் நீங்களும் விடவில்லையே. அதனால் முதன் முறையாக நான் எனது வாழ்க்கை பற்றி ஊடகமொன்றில் கதைத்திருக்கின்றேன். அதிலிருந்து யாரேனும் ஏதேனுமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியு மாக இருந்தால் அதுவே போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *