Quarantine – தனிமைப்படுத்தல் – என்ற சொல் உருவானது எப்படி

நவீன மருத்துவத்துறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் அலி இப்னு ஸீனா. மேற்குலகில் இவரை அவிஸினா என்றழைக்கிறார்கள். 
அன்றைய பரந்த பாரசீகத்தில் (இன்றைய உஸ்பெகிஸ்தானில்) கிபி 980ம் ஆண்டில் பிறந்த அலி இப்னு ஸீனா, சிறுவயது முதலே மருத்துவத்துறையில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்; பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டார். 

நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களினால் அன்றைய மக்கள் பெரும் துக்கத்துக்கு ஆளாகி வருவதைப் பார்த்து வேதனைப்பட்டார். இதை எப்படி தீர்ப்பது என யோசிக்கத் தொடங்கினார். ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.இதன் விளைவாக அலி இப்னு ஸீனா கண்டறிந்ததுதான் கொரண்டைன். 

ஆம். மனிதனில் இருந்து மனிதனுக்கு நுண்ணுயிர் அல்லது வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்காக, நோய் தொற்றுக்குள்ளானவரை ஒரு மாதமும் பத்து நாட்களும் (நாற்பது நாட்கள்) தனிமைப்படுத்தி வைக்கும் புதிய முறையை அலி இப்னு ஸீனா அறிமுகம் செய்தார்இந்த முறை, ‘அர்பஈய்ன்’ என்று அழைக்கப்பட்டது. அரேபியா மற்றும் பாரசீகத்துடன் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்த வெனிஸ் நகர வர்த்தகர்கள் இத்தாலியில் இந்த முறையை முதலில் அறிமுகம் செய்தார்கள். 

இத்தாலியின் வெனிஸ் நகரம் அன்றை ஐரோப்பாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கியது குறிப்பிடத்தக்கது.  ‘அர்பஈய்ன்’ என்ற அரபுச் சொல்லுக்கு – அதாவது நாற்பது என்பதற்கு – quaranta (குஆரன்டா) என்று அர்த்தம். இதனைத் தழுவியே Quarantine – தனிமைப்படுத்தல் – என்ற சொல் உருவானது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *