ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி பூமியை தாக்கவுள்ள விண்கல் தாக்கினால் பாரிய அழிவு ஏற்படும்!

மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும், இந்த விண்கல் பூமியை தாக்கினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் எனவும் நாசா அறிவித்துள்ளது. விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

அதன்படி,நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட எரிகல் ஒன்று பூமியை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது. இந்த எரிகல் வரும் ஏப்ரல் 29ம் தேதி, புதன்கிழமை அதிகாலை 4:56 மணிக்கு பூமிக்கு மிக அருகில் இந்த எரிகல் பறந்து செல்லும் என கணிக்கப்படுகிறது.குறிப்பாக இந்த எரிகல் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றும் பூமியை எரிகல் நெருங்கும்போது அளவு குறைந்து சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது நாசா. இந்த எரிகல்லுக்கு 52768 (1998 OR2) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த எரிகல் முதலில் 1998ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எரிகல் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த எரிகல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது என்பதால் இதை அபாயகரமான எரிகல்லாக நாசா குறிப்பிட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *