சுவிட்சர்லாந்தில் அவசரகாலநிலை பிரகடனம்

சுவிசில் 08.04.2020 புதன்கிழமை  தற்போதைய நிலவரம் தொடர்பாக விளக்குவதற்கான ஊடகமாநாடு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக சுவிஸ் கூட்டாட்சியினால் எடுக்கப்பட்ட அவசரகாலப்பிரகடனமும், அதற்கான நடவடிக்கைகளும், விதிமுறைகளும் ஏப்ரல் 26 வரை நீடிக்கப்படுகின்றன.

அதன் பின் படிப்படியாக வழமைக்குத்திரும்பும் வகையிலான நடவடிக்கைகள் முடிவெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பெரும்பலான மக்கள் சுவிற்சர்லாந்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து, தங்களினதும் பிறரினமும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். அடைந்த இலக்கை நினைக்க திருப்பதியாக உள்ளதும் ஆனால் அதை கைவிடக்கூடாது எனவும் கூட்டாட்சி அரசுத்தலைவர் சிதொனெத்தா சொமறூகா மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

“செல்லும் பாதை சரி. ஆனால் இலக்கை இன்னும் அடையிவில்லை!” என்றார் சிமொனெத்தா சொமறூகா.

“தள்ளாடிக்கொண்டிருக்கும் சமநிலையில் நிலைமை உள்ளது. எனவே தொற்றுநோயின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன் வழமைக்கு மாறுவதை முடிவெடுக்க முடியும். அடுத்த வார கூட்டத்தில் படிப்படியாக முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.”என்று சுகாதார அமைச்சர் அலேன் பேர்சே கூறியிருந்தார்.

பெரிதாக மனிதர்கள் ஒன்றுகூடும் இடங்களைத்தவிர்த்து, ஏனையவை இடைவெளியையும், சுகாதாரத்தையும் கடைப்பிடித்தால் மீண்டும் விரைவில் திறக்கப்படலாம். எனினும் பாதுகாப்பு முகமூடிகளை அணிவதா, இல்லையா என முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தொற்றுநோயின் பெருக்கம் குறைவது தெரிகின்றது. நாளுக்கு நாள் 1000 ஆக தொற்றி வந்தது, தற்பொழுது 600ற்கு கீழாக மாறி வருகின்றது குறிப்பிடத்தக்கது எனவும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களின் மூலம் தண்டம் அறவிடுவது அல்ல எங்களின் இலக்கு! எமது இலக்கு இதுவே!

“கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களின் மூலம் தண்டம் அறவிடுவது அல்ல எங்களின் இலக்கு. அவற்றை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்கு என சுவிஸ் மாநிலங்களின் காவல்துறை மேலதிகாரி ஸ்ரெபன் பிலெட்லர் கூறியுள்ளார்.

கூட்டாட்சியில் கொரோனாவின் தகவல் பரிமாற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டானியல் கொக்: “நேற்றில் பார்க்க இன்று 590 பேருக்கு கொரோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“நிலைமை நன்றாகின்றது என்று சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இன்னும் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை. எனவே தொடர்ந்தும் அறிவித்தல்களிற்கும், நடவடிக்கைகளின்கும் ஏற்ப நடந்து கொள்வது முக்கியமாகும்.

மற்றும் முக்கியமாக வேறு நோய்கள் இந்நேரம் வரும் பொழுது பயத்தினால் அவசர மருத்துவ வாகனத்தில் செல்ல வேண்டாம். அதுவும் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம். பிள்ளைகளிற்கு இது வரை இப்படியான நிலைகளில்கொரோனாவாக இருந்தது மிக குறைவாகும்.”

“வெவ்வேறு நாடுகளிற்கு சுவிஸில் இருந்து சென்றவர்களை மீண்டும் சுவிஸிற்கு அழைத்து வரும் பணி மலையுச்சியை கடந்து விட்டது. எனினும் இன்னும் வெளநாடுகளில் நிற்பவர்கள் அங்கிருந்து புறப்படும் விமானங்களை பயன்படுத்தி சுவிஸிற்கு வந்து சேரவும்!

ஆனால் 1000ற்கும் குறைந்தவர்கள் மட்டுமே தற்பொழுது சுவிஸில் இருந்து சென்று வெளிநாடுகளில் இன்னும் நிற்கிறார்கள் என சுவிஸின் வெளிநாட்டு அலுவலகங்களிற்கான துறை தெரிவித்துள்ளது.” என சுவிஸ் நெருக்கடி மையத்தின் பொறுப்பாளர் கான்ஸ் பீற்றர் லென்ஸ் கூறினார்.

“கடந்த சனியும், ஞாயிறும் பெரும்பாலானவர்கள் அழகான காலநிலையின் போதும் வீடுகளிலே இருந்தனர். அவர்களிற்கு என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். எனினும் அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையின் கண்காணிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.

இவ்வாறே ஈஸ்டர் பண்டிகை நாட்களிலும் கண்காணிப்புகள் தொடரும். மக்கள் பொது இடங்களில் கூடுவதையும், தனிப்பட்ட விழாக்களை செய்வதையும் நாங்கள் கண்காணிப்பதன் அர்த்தம் தண்டம் அறவிட வேண்டும் என்பதற்காக அல்ல.

கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களின் மூலம் தண்டம் அறவிடுவது அல்ல எங்களின் இலக்கு. அவற்றை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்கு! மற்றும் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். புதிய முடிவுகளிற்கு காரணம் காவல்துறை அல்ல.

புதிய முடிவுகள் தொற்றுநோயியல் வளர்ச்சியில் இருந்தே எடுக்கப்படுகின்றன. காவல்துறையின் சார்பாக நாங்கள் மக்களிற்கு கூறுவது உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்! பயணங்களை தவிருங்கள்! மலைகளிற்கு செல்வதையும் இப்பொழுது தவிருங்கள்! அதற்கான நேரம் விரைவில் வரும்.

வீட்டு வன்முறைகள் அதிகரிக்கலாம் என பயந்தோம். ஆனால் தற்பொழுது அப்படி ஒரு நிலை நல்ல காலம் வரவில்லை!” என சுவிஸ் மாநிலங்களின் காவல்துறை தளபதி ஸ்ரெபன் பிலெட்லர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *