சுவாசக்கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்த பாதிரியார் இளம் நோளியாளிக்கு அதை வழங்கி மரணத்தை தழுவியுள்ளார்

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சுவாசக்கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்த பாதிரியார் ஒருவர் இளம் நோயாளி ஒருவருக்கு அதை தானமாக வழங்கி மரணத்தைத் தழுவியுள்ளார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மோசமான சூழல் இருந்துவரும் லோம்பார்டி பகுதியிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்பகுதியில் உள்ள Casigno என்ற கிராமத்தில் சேவையாற்றி வந்த 72 வயது பாதிரியார் Giuseppe Berardelli என்பவரே பொதுமக்களால் தமக்கு வழங்கப்பட்ட சுவாசக்கருவிகளை இளம் கொரோனா நோயாளி ஒருவருக்கு தானமாக வழங்கியவர்.

தானமாக பெற்ற அந்த இளம் நோயாளிக்கும் குறித்த பாதிரியாருக்கும் இதுவரை எந்த அறிமுகமும் இல்லை என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *