கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16000 ஐ தாண்டியது

உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி  வருகிறது. இதுவரை 3, 78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி  16,503 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த வைரசுக்கு 476  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் தோன்றிய சீனாவை பின்னுக்கு தள்ளி தற்போது இத்தாலி கொரோனா பாதிப்பில் முன்னிலை வகிக்கிறது. இங்கு  நேற்று முன்தினம் ஒரேநாளில் 651 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் பலி எண்ணிக்கை 6,077 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக  5,560 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,927 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 3,277 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 5,560 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,171 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இதுவரை 2,311 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 3272 பேரையும்  சேர்த்து மொத்தம் 35,136 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதேபோல் ஈரானில் இதுவரை கொரோனா பலி எண்ணிக்கை 1,812 ஆக  அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,049 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 552 பேர்  உயிரிழந்துள்ளனர். 43,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் பலி எண்ணிக்கை 860 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 19, 856 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். 29,056 பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 335 பேர் உயிரிழந்துள்ளனர். 6,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 1,887 பாதிக்கப்பட்டுள்ளனர். பெல்ஜியத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். 3,743 பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 42 பலியாகியுள்ளனர். 1,1128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் 6 பேர் பலியாகியுள்ளனர். 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் 2 பேர் பலியாகியுள்ளனர். 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவூதியில் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரும் பலியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *