தென் அமெரிக்காவின் ஆபத்தான ஒரு அதிசய உலகம்

தென் அமெரிக்காவின் ஆபத்தான ஒரு அதிசய உலகம் அமேசன் காடு சூரிய வெளிச்சமே காணாத தரையும் வருடமெல்லாம் மழையை கண்ட நிலமும் இந்த அமேசன் காடு. இது பிரசில் கொலம்பியா வெனிசுலா உட்பட 8 நாடுகளை எல்லைகளாகக் கொண்டது. பூமியில் உள்ள மொத்த பிராண வாயுவில் 20% இங்குதான் உற்பத்தியாகிறது

இது 17 பெரிய ஆறுகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கிளையாறுகளையும் கொண்ட மிகப்பெரிய நதி அமேசன் நதி. இங்கு 25 லட்சம் வகையான பூச்சி இனங்களும், ஆயிரக்கணக்கான தாவர இனங்களும் ஏறத்தாள 2000 வகையான பறவைகளும் பாலூட்டிகளும் இங்கு வாழுகின்றன. உலகிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி இங்கு வசிக்கின்றன.

பிரேசில் நாட்டில் தொடங்கிய இந்த காடு ரஷ்யாவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய காடாகும். 4 கோடியே 77 லட்சத்தி 69 ஆயிரம் சதுர மீட்டர்கள் கொண்டது இந்த காடு.  அமோசன் பிரதான ஆறு நாலாயிரத்து 80 மையில் நீளமானது. அதன்வடி கால் 27 லட்சத்தி 22 ஆயிரம் சதுர மைல்களை உள்ளடக்கியது. 28 பில்லியன் கலங்கள் நீர் ஒவ்வொரு நிமிடமும் அட்லாண்டிக் சமுத்திரத்தில் பாய்கிறது. இது 12 வருடங்கள் நியூயோர்க் நகரம் பாவிக்கும் நீரின் அளவை ஒரு நாளில் கடலில் பாய்கிறது.  இதனால் அங்கு உப்பு நீர் அடர்த்தி குறைந்து நன்னீரின் அடர்த்தி உயர்ந்து காணப்படுகிறது.  இந்தக்  காடும் இந்த நதியின் ஆயுளும் கிட்டத்தட்ட 5.5  கோடி வருடங்கள் ஆகும்.

உலகிலுள்ள ஒரு கோடிக்கு மேலான உயிரினங்களில் அதாவது தாவரங்கள் விலங்குகள் பூச்சிகள் போன்றவைகளில் 50 லட்சத்துக்கு மேல் இங்கு வாழ்கின்றது 3000 வகையான மீன்கள் ,1500 வகையான பறவைகள் ,1800 வகையான வண்ணத்துப் பூச்சிகள் , 200 வகையான கொசுக்கள் இங்கு வாழுகின்றன.

அதேநேரம் 3000 பழ வகைகள் இங்கு கிடைக்கின்றன அதில் 200 வகையான பழங்கள் மட்டுமே எமக்கு கிடைக்கின்றன ஏனையவைகள் அடர்ந்த பயங்கர காடுகள் மிகவும் மோசமான விலங்குகள் வாழ்வதால் அதை மனிதனால் கொண்டுவர முடிவதில்லை. ஆனால் அங்கு வாழும் பழங்குடியினர் 2000 பழவகைகளை உண்டு வாழ்கின்றார்கள். இந்த மக்கள் விலங்குகளை பச்சையாக உண்ணுகிறார்கள் இவர்களுக்கு தீயில் சுட்டு உண்ணும் பழக்கம் தெரியாது.

மேலும் இந்தப் பழங்குடியினர் 20,000 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். கி பி 1500 இல் 6.90 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போது வெறும் 2.5 இலட்சம் பேர்கள் தான் உள்ளனர். 215 குழுக்களாக வாழும் இவர்கள் 170 வகையான மொழிகளைப் பேசுகின்றார்கள். இதேபோல் இங்கு மனிதனால் கண்டுபிடிக்க முடியாத ஆயிரக்கணக்கான மர்மங்கள் இன்னும் நிறைய உண்டு. ஆய்வுகள் செய்ய நடுக் காட்டில் விமானங்கள் மூலம் இறங்க முயற்சி செய்யும் போது ஏதோ பெரிய வகையான பறவைகள் தம்மை தாக்க வருவதாக நினைத்து விமானங்களை தாக்க முற்படுகின்றார்கள். வெளி உலகமே தெரியாமல் இயற்கையோடு இணைந்து வாழும் இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமானாலும் சாதாரண தடிமல் காய்ச்சலினால் மரணிக்கின்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *