கொரோனா குறித்த தகவலை சீனா மறைத்ததால் உலக நாடுகள் பெரும் அழிவை சந்திக்கிறது

கொரோனா வைரஸ் குறித்த தகவலை சீனா மறைத்ததால் உலக நாடுகள் பெரும் விலையை கொடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர், கொரோனா குறித்து சீனா முன்கூட்டியே தெரிவித்திருந்தால் உலகளவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என்று என்று அவர் தெரிவித்தார். கொரோனா பற்றிய உண்மைகளை சீனா வெளியிடாததால் மிகப்பெரிய பாதிப்புகளை உலகம் சந்திதுள்ளதாக அவர் விமர்சனம் செய்தார்.

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 9,417 பேர் பாதிப்படைந்தும், 150 பேர் பலியாகியும் உள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது.

2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கூட இந்த வைரசின் பாதிப்பையும், உயிர் பலியையும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாம் போரில் ஈடுபட்டுள்ளதாகவும், நாம் மட்டுமின்றி, உலகமே போரில் ஈடுபட்டுள்ளதாக டொனால் டுட்ரம்ப் தெரிவித்துள்ளார். கண்ணுக்கு தெரியாததாக இருந்தாலும், உலகமே தெரிந்து கொண்ட ஒன்றாகி விட்டது.

நிச்சயமாக அந்த எதிரியை வீழ்த்துவோம். அதற்காக எல்லா வளங்களையும் பயன்படுத்துவோம். இந்த பிரச்னைக்கு நாம் தீர்வு கண்ட பின்னர், வழக்கமான பணிகளுக்கு நாம் விரைவில் திரும்பலாம். அதுவரை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். உலகத்தில், பாதிப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை நிச்சயம் இடம் பெறச் செய்வேன். இந்த போரில் நாம் வெற்றிபெற காலதாமதம் ஆவது நல்லது அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *