அடங்காத கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பு 8000 ஐ தொட்டது

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16%  அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,503 பேர் இறந்திருக்கின்றனர். இந்தியாவிலும் இந்த வைரசுக்கு 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில், புதிய நம்பிக்கையை அமெரிக்கா ஏற்படுத்தியது. கொரோனா வைரஸை முறியடிக்கும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்துயென எதுவும் இதுவரை இல்லை. இதனால்,  அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும், மசாசூசெட்ஸ் மாநிலத்தில் செயல்படும் கேம்பிரிட்ஜின் மாடெர்னா என்ற உயிரி தொழில்நுட்பமும் இணைந்து, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். நார்வே  நாட்டை சேர்ந்த சி.இ.பி.ஐ என்ற ஆராய்ச்சி கட்டளையும், இதற்கான நிதி உதவிகளை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, எம்.ஆர்.என்.ஏ. 1273 என குறிப்பிடப்படும் இந்த தடுப்பூசி மருந்தின் சக்தி கொரோனா வைரஸை முறியடிக்கும் திறன்  ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக மனிதர்கள் மீதான பரிசோதனையும் தொடங்கியுள்ளது.

தாங்களாக முன்வந்த 18 முதல் 55 வயது நிரம்பிய ஆரோக்கியமான 45 பேரை தேர்வு செய்து, 6 வாரங்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளது. சியாட் நகரில் நடைபெற்று வரும் இந்த பரிசோதனை திட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களில்  முதலில் ஒருவருக்கு கடந்த 16-ம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. முதல்கட்ட பரிசோதனை என்பது சாதனை வேகத்தில் தொடங்கியுள்ளதாகவும், விரைவாக தடுப்பூசி மருந்தை நடைமுறைக்கு கொண்டு வருவதே நோக்கம் என அமெரிக்க  சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் கூறியது.

இந்நிலையில்,அமெரிக்காவை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவிலும் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. மனிதர்கள் மீதான கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை  தொடங்கிவிட்டாலும், பாதுகாப்பானது தான் என உறுதிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *