கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு 9 வேடங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி – காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார்.

அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.
இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
டத்தை இயக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் படத்தை பற்றி கூறியதாவது:-
‘‘இது, ஜெயம் ரவி நடிக்கும் 24-வது படம். இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *