புறக்கோட்டையில் வெடிபொருட்கள் மீட்பு!
கொழும்பு – புறக்கோட்டை பெஸ்ட்டியன் மாவத்தையில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 87 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தனியார் பஸ் நிலையத்தில் 12 டெடனேட்டர்களும் அங்கு குப்பை குவிக்கப்பட்ட இடத்தில் 75 டெடனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. து.
சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேடுதல் வேட்டையும் தொடர்கின்றது.