‘மன்கட் முறையில் அவுட் ‘ – அஸ்வின்மீது பட்லர் பாய்ச்சல்!

கடந்த மார்ச் 25ஆம் திகதி நடைபெற்ற ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், மன்கட் முறையில் தன்னை ஆட்டக்களத்தில் சர்ச்சைக்குரிய மன்கட் முறையில் வெளியேற்றியது பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் ஏமாற்றம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மன்கட் முறையில் தன்னை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றியது பற்றி முதல் முறையாக கருத்து தெரிவித்திருக்கும் ஜோஸ் பட்லர், இதற்குரிய சட்டத்தை எம்சிசி திருத்தவேண்டும் என்றும் அப்போதுதான் இந்த விஷயம் தெளிவாகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “அந்த அவுட் தரப்பட்டது எனக்குப் பிடிக்கவில்லை. அந்த தீர்ப்பு சரி என்று நான் நினைக்கவில்லை. இதற்கான விதிகள் எழுதப்பட்ட முறையில் இருந்து பார்த்தால் அந்த முடிவு தவறானதுதான்.

அந்த விதி எழுதப்பட்ட விதம் குறித்து அவர்களுக்குத் தெளிவு வேண்டும். ‘பௌலர்கள் பந்தினை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும்போது’ என்ற ஒரு பதம் அந்த விதியில் உள்ளது. இது தெளிவற்று உள்ளது. அதை கூர்மையாக்கவேண்டும்” என்று ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.

அந்த சர்ச்சைக்குரிய அவுட் – எப்படி நடந்தது?

அன்றைய ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பந்துவீச்சாளர் அஸ்வின் எதிர் முனையில் இருந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீசத் தயாரானார்.

அப்போது, கிரீஸைவிட்டு வெளியேறி ஓடத் தயாரானார் ஜோஸ் பட்லர். அந்நேரம் பந்துவீச வந்த அஸ்வின், பந்தை வீசாமலே ஜோஸ் பட்லரின் பக்கம் இருந்த ஸ்டம்பை பந்தால் தட்டி திடீரென அவுட் செய்தார்.

ஐபிஎல் கிரிக்கெட், இந்திய ரசிகர்களுக்கு முன்னால் விளையாட ஆர்வமாக இருப்பது, ஸ்டீவ் ஸ்மித்தோடு விளையாடுவது பற்றி அவர் பிபிசியிடம் கலந்துரையாடினர்.

“இவ்வாறு வெளியேற்றப்பட்டதை நான் விருமப்வில்லை. அது சரியென நான் நினைக்கவில்லை. சட்டம் எழுதப்பட்டதையும் நான் எண்ணி பார்க்கிறேன். என்ன இருந்தாலும் இந்த முடிவு தவறானது.

இந்த சட்டம் எழுதப்பட்டது பற்றி அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். பந்து வீச்சாளர்கள் பந்தை எப்போது வீச வேண்டுமென முடிவு செய்ய அணியொன்று இருப்பதாக நினைகிறேன். இந்த பகுதி சற்று தெளிவில்லாமல் உள்ளதாக நினைக்கிறேன். அவர்கள் அதனை கூர்மைப்படுத்த வேண்டும்” என்று ஆஜாஸ் பட்லர் பிபிசியிடம் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *