ஏப்ரல் 2இல் இலங்கைக்கு வருகிறது சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. குழு!

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நாவின் உப குழு, அடுத்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 2ஆம் திகதி இந்தக் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இந்தக் குழுவினர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்புகளுடனும் பேச்சு நடத்தவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோல்டோவா நாட்டைச் சேர்ந்த விக்டர் ஸகாரியா தலைமையிலான இந்தக் குழுவில், மொறிசியஸைச் சேர்ந்த சத்யபூசண்குப்தா டோமா, சைப்ரசைஸ்ஹ் சேர்ந்த பெட்ரோஸ் மைக்கலிடேஸ், பிலிப்பீன்ஸைச் சேர்ந்த ஜூன் லொபீஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை நடந்த சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நாவின் உப குழுவின் இரகசியக் கூட்டத்திலேயே இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான பயணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டன், காபோன், செனகல், கானா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த இந்தக் குழு தற்போது மேலதிகமாக இலங்கை, ஆர்ஜென்ரீனா, பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *