9413 மாணவர்களுக்கு 9 ‘ஏ’! வேம்படி – 50; யாழ். இந்து – 35!!

 

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் இம்முறை 9413 பேர் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர் எனக் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின. இந்நிலையில், 9413 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர் எனக் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தப் பெறுபேறுகளின் பிரகாரம் வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி உச்சநிலையைப் பெற்றுள்ளது. அங்கு ஐம்பது மாணவிகளுக்கு 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி கிட்டியுள்ளது. 8 ‘ஏ’ பெறுபேறு 49 மாணவிகளுக்கு வந்துள்ளது. 7 ‘ஏ’ பெறுபேற்றை 34 மாணவிகளும், 6 ‘ஏ’ பெறுபேற்றை 35 மாணவிகளும் பெற்றுள்ளனர்.

வேம்படி மகளிர் கல்லூரியில் முழு மாணவர்களும் – அதாவது நூறு வீதம் இத் தேர்வில் சித்தியடைந்து உயர் வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 35 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தியையும், 42 மாணவர்கள் 8 ‘ஏ’ சித்தியையும் பெற்றுள்ளனர்.

அங்கும் தோற்றிய மாணவர்கள் அனைவரும் நூறு வீதம் உயர்வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *