இலஞ்ச, ஊழலுக்கு சமாதிகட்ட ஐந்நாண்டு பொறிமுறை!

இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (18) வெளியிடப்பட்டது.

இதன்போது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவரினால் செயற்திட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் இலஞ்ச, ஊழலை இல்லாதொழித்து அதன் மூலம் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் சுற்றாடல் ரீதியான பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்துவது இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டின் அனைத்து நிறுவனக் கட்டமைப்பிலும் ஊழலை ஒழித்தல், தண்டனை முறைமைகள் மற்றும் சட்ட கொள்கைகளை திருத்துதல் ஆகிய முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுமார் 40 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்களை கவனத்திற் கொள்வதற்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூன்று நிக்காயாக்களின் சங்கைக்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச உட்பட மேலும் பல பிரமுகர்கள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *