எந்த கொம்பன் எதிர்த்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றியே தீருவேன்! ஜனாதிபதி உறுதி!!

போதைப்பொருள் கடத்தல், விற்பனையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் தான் உறுதியாகவே இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ( 06) சந்தித்த ஜனாதிபதி, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கையில் மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறித்து கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி,

” எந்தவொரு எதிர்ப்பு வந்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளேன். நாட்டின் நன்மை கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் நாடு முழுவதும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக அனைத்து பிரிவினரின் ஆதரவும் மிகவும் சிறப்பான முறையில் கிடைக்கின்றது.” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *