அபிநந்தனை மீட்டுவந்த பிரபாகரன்!

பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் தொடர்பான தகவல்களே கடந்த 4 நாட்களாக சமூகவலைத்தளதில் பிரதான இடத்தைப்பிடித்திருந்தது.

அதுமட்டுமல்ல,  அபிநந்தனை அழைத்துவருவதற்காக சென்ற விமானப்படை வீரரின் பெயர் பிரபாகரன். குறித்த பெயரும் தற்போது வைரலாகிவருகின்றது.
கடந்த மாதம் 27ஆம் திகதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.
பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.
இதன தொடர்ந்து விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார். வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டார்.
பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானி அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
                                                  தாயகத்தில் பெரும் வரவேற்பு
சாலை மார்க்கமாக அழைத்துவரப்பட்ட அபிநந்தனை வரவேற்க வாகா – அட்டாரி எல்லையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்தும் ஆரவாரமாக அபிநந்தனை தாயகம் வரவேற்றனர்.
இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கும் விதமாக #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
இந்திய விமானப்படையின் விங் கமான்டர் அபிநந்தனின் ‘தமிழக’ மீசை ஸ்டைல் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.நேற்றிரவு 9.15 மணியவில் இந்தியாவுக்குள் வந்தார் அபிநந்தன்.
அவரது தமிழக அருவா ‘மீசை’ ஸ்டைல், இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. இதுகுறித்து பலரும் அவரது மீசையையும், உதட்டில் உதிரும் சிரிப்பையும் புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன் வெளியான முதல் புகைப்படம்! வீடியோ” பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக்கொண்ட தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் அபிநந்தன்,  இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தார்.
அதன்படி வாகா எல்லையில் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கூடி அபிநந்தனின் வரவிற்காக காத்திருந்தனர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
அழைத்துவந்த பிரபாகரன்
6 மணிக்கெல்லாம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவார் என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அனைத்து வகையான சோதனைகளையும் முடித்துவிட்டு இரவு 9.20 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவரை அழைத்து வருவதற்காக இந்தியாவின் சார்பில் ஏர் வைஸ் மார்ஷல் பிரபாகரன் சென்றார். இந்த பெயரை கேள்விப்பட்ட தமிழர்கள் பலரும் தற்போது உற்சாகத்துடன் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
நன்றி – தினந்தந்தி
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *