திருப்பதியில் மொட்டைபோடும் மஹிந்தவின் சகாக்கள்….!

மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் திருப்பதிக்குசென்று, ஏழுமலையானை வழிபடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி  வகித்த காலப்பகுதியில்கூட அமைச்சரவை மாற்றம்,  தேல்தல் அறிவிப்பு என்பன உட்பட முக்கிய முடிவுகளை  எடுப்பதற்கு முன்னர் – எவ்வளவுதான் வேலைகள் இருப்பினும், அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு திருப்பதி திருத்தலத்துக்கு சென்றுவந்த பிறகே – முடிவுகளை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார்.

ஒருசிலவேளை, அவரது பயணம் பாதுகாப்பின் நிமிர்த்தம் மிகவும் இரகசியமான  முறையிலேயே முன்னெடுக்கப்படும். இதனால், அது தொடர்பான தகவல்கள் ஊடகங்களிலும் வெளிவருவதில்லை.

தற்போது மஹிந்த ராஜபக்சக்களின் சகாக்களும் அவரின் வழியைப் பின்பற்றி ஏழுமலையானை தரிசிப்பதற்காக  அடிக்கடி திருப்பதி செல்கின்றனர்.

ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர ஆகிய இருவரும், அண்மையில்  திருப்பதிக்குசென்று மொட்டையடித்துள்ளனர்.

இதற்கான காரணம் என்னவென்பதை அவர்கள்  இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

எனினும், நாட்டில் அரசியல்  சூழ்ச்சி ஏற்பட்டபோது, நாடாளுமன்றத்திலும்  பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. மிளகாய்த்தூள்  கலந்த தண்ணீர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், சபாபீடத்துக்கும் தேசங்கள் விளைவிக்கப்பட்டன.

இதன்பிரதான  சூத்திரதாரியாக பிரசன்ன  ரணவீர எம்.பி. அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனவே, தண்டனைகளிலிருந்து தன்னை காப்பாற்றுமாறுகோரியே அவர் மொட்டையடித்துள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *