‘ஜெனிவாச் சமர்’ நாளை ஆரம்பம்! – இலங்கை விவகாரத்தைக் கையிலெடுக்கின்றது பிரிட்டன்

‘இராஜதந்திர சமர்க்களம்’ என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர் சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் நாளை (25) ஆரம்பமாகின்றது.

மார்ச் 22 ஆம் திகதி வரை நடைபெறும் குறித்த மாநாட்டில், அங்கத்துவ நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. இலங்கை விவகாரமும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் இலங்கை தூதுக்குழுவினர் ஜெனிவா செல்லவுள்ளனர்.

அத்துடன், அரசசார்பற்ற அமைப்புகளால் நடத்தப்படும் உபமாநாடுகளில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் ஜெனிவா செல்கின்றனர்.

இலங்கை குறித்து பிரிட்டன் தலைமையில் தீர்மானமொன்று முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில் அங்கத்துவம் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *