குடு மன்னன் ஒலு மராவும் ஹெரோயினுடன் சிக்கினார்!

பாதாள கோஷ்டி உறுப்பினரான ‘ஓலு மரா’ என்றழைக்கப்படும் ஷானுக மடுஷான் உட்பட 11 பேர் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோப்பு படம் – file photo

வென்னப்புவ, சிறிகம்பல பகுதியில் வைத்தே நேற்று மாலை இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஒலு மராவிடம் போதைப்பொருள் வாங்கவந்த 11 பேர் உட்படவே மொத்தமாக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஓலு மரா என்பவர் கடந்த காலத்திலும் போதை பொருள் விற்பனை தொர்பில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *