சுதந்திர தின நிகழ்வில் அமளிதுமளி!

சுதந்திர தின நிகழ்வில் அமளிதுமளி!

– பிரதமரை விலாசித்தள்ளிய அதாவுல்லா!!

===================================

நாடு பூராகவும் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டப்பட்ட நிலையில் இன்றைய தினம் அக்கரைப்பற்று வர்த்தக சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வு அக்கரைப்பற்று சந்தை வளாகத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இக் கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது,

‘கொழும்புக்கு பஸ்ஸில போகா என்ன பிளேன் யா போற’ என்று நகைச் சுவையாக ஆரம்பித்த வண்ணம், அதுவல்ல நோக்கம் எம்.பி. வேலை எடுப்பதற்கு அல்ல ரணிலை அரசியலை விட்டு ஒதுக்கவே!, ரணில் விக்கிரசிங்கவை அறிந்துகொள்ள நமது அரசியல்வாதிகள் அவரை இன்னும் இன்னும் படிக்க வேண்டும். இது இப்போது மக்களுக்கு புரியாது.

ஒவ்வொருவருக்கும் தேவையான வேலைகளைச் செய்வதற்கு சமூகங்களைக் கூரு போட்டு, சமூகத்தை காட்டிக்கொடுத்து அரசியல் இருப்புக்களை வைத்துக் கொள்ள முனைகின்றனர். இது போக, மன்னாரிலிருந்து 8 ‘லேன்ட் ரோட்’ இடப்படவுள்ளது. இது அண்மையில் செய்யப்பட்ட சிங்கப்பூர் ஒப்பந்தம். தந்திரமாக ரணிலை மடக்கி சிங்கப்பூர் ஒப்பந்தம் எனும் பெயரில் அவர்கள் இராணுவத்தளத்தை ஸ்தீரணமாக நிறுவ வந்துள்ளார்கள்.” – என்றார்.

இது மாத்திரமா……! என கூறி பல விடயங்களை பேசிய வேளையில் வட்டமடு விவகாரத்தைப் பற்றி பேச ஆரம்பித்த போது, அங்கிருந்து பொதுமக்களில் சிறு குழுவினர் குழப்பத்தை விளைவிக்க எத்தணித்தனர்.

இருந்த போதிலும் மேடையை அசர வைத்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனது உரையை நிறுத்தாமல் தொடரக பேசிய வண்ணமே இருந்தார். சில நிமிடங்களில் இன்னும் வாய் வீராப்பு அதிகரித்தது. அச் சமயம் குறித்த குழப்பதார்களைப் பார்த்து முன்னாள் அமைச்சர் “டேய் சும்மாஇரி, இந்தக் சின்னச் சின்ன சலசலப்பு, இந்தச் சலசலப்பெல்லாம் சரிவாரா” என்று எள்ளி நகையாடினார்.

இதன் தொடரில், வீரியமாக பிரதமரையும் அவரது சகா முஸ்லிம் எம்.பி.க்களை விலாசித்தள்ளிய அவர் தொடர்ந்தும் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறினார்.

அதாவது,“இப்பொழுது சிலர் மாகாண சபை தேர்தல் நடாத்த வேண்டும் என்றால், (‘பொது’ என்று ஒரு வார்த்தையை முழுங்கிய வண்ணம்) இதுதான் நடக்க வேண்டும் சொல்கின்ற இனவாதிகள் நமக்குள் இருக்கின்றார்கள்” என்றார்.

இங்கு நாம் ஒரு விடயத்தை நோக்குவாமானால், இன்றைய தினத்தில் அனைத்து மேடைகளிலும் அரசியல் நாடகங்கள் அரங்கேறிய காட்சியைத் தான் பார்த்தோம். அத்தனையையும் முழுப்பூசனிக்கவை மறைப்பது போல மூடி மறைத்து நல்லவைகளை மட்டும் பேசி விட்டு ஆளுக்கு ஆள் கைகூப்பி, ஸ்ருதி பாடிய காதைதான்.

இருந்த போதிலும், இந் நாளில் சுதந்திரம் கிடைத்தும் எமக்கு சுதந்திரம் இல்லை. பிரித்தானிய காலனித்துவத்தில் வெளிப்படையாக நாம் சிக்கியிருந்த நிர்க்கதியை விட மறைமுகமாக தற்போது எமது நாடு பொறி வலைக்குள் தள்ளப்படுகின்றமையை பகிரங்கமாக எடுத்துரைத்தார்.

அதில் அவர் குறிப்பிடுகையில், அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் பரவலாக பேசப்பட்ட விடயம் ஒன்றினையும் விரிவாக கூறியிருந்தார். அதாவது, தற்போது அமெரிக்க உட்பட சில நாடுகளின் எந்தவொரு கப்பலையோ அல்லது விமானத்தினையோ சோதனை செய்வதில்லை. அவர்களின் மீது எவ்வித சோதனைகளும் மேற்கொள்ள முடியாது என்ற நிலைமை அவர்கள் தாராளமாக எதனையும் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற விடயத்தை உணர்வுபூர்வமாக வினா எழுப்பினார்.

இதை வைத்துப் பார்க்கும் போது, அரசியலுக்கு அப்பால் சமூகத்தின் சில தூரநோக்கான விடயங்களை பகிரங்கமாக பேசிய போது அவர் ஏனைய கட்சிகளின் தலைமைகளையும் சாடியவண்ணமே பேசினார்.

அந்த சந்தர்ப்பத்திலேதான் அதாவுல்லாவின் உரை வலுக்கத் தொடங்கியது. அப்போதைய சந்தரப்பத்தில் தான் குறித்த அமளிதுமளியும் மேடையை சூழ்ந்தது. அந்த நேரம் அதாவுல்லாவுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் நிகழ்ந்த சூழலில் அதாவுல்லா பேசிய விடயமானது முழு முஸ்லிம் சமூகத்தினதும், முழு நாட்டினதும் நலன் கருதியவண்ணமே அமைந்திருந்தது, அப்படியான ஒரு நிலைமையில் ஊர் மக்கள் அந்தக் கூற்றுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

எது எவ்வாறாக இருந்தாலும், மறு பக்கம் சிந்திப்போமேயானால்……
அரசியலில் எதிரும், புதிருமதன அதாவுல்லா, தவம் ஆகியோர் அண்மித்து மேடையில் இருந்தமை ஒரு புதினமாகவே காணப்பட்டது. அப்படி இருக்கும் போது அக்கரைப்பற்றினைப் பொறுத்தவரையில் அதாவுல்லாவுக்கு அரசியல் வில்லானாக சித்தரிக்கப்பட்டிருப்பவரே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம்.

ஆனால், தவமும் மேடையில் தான் இருந்தார்..! அதாவும் மைக்குடன்…..!! அப்படியென்றால் குழப்பியது யார்?

ஒரு வேளை “பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டிய” கதையாக இருக்குமோ !!?.

 

~ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *