AIA இன்ஷுரன்ஸ் காப்புறுதியின் இலகுவான – மலிவான கொள்வனவை எளிதாக்கின்றது!

ஆயுள் காப்புறுதியின் பெறுமதியை மிகைப்படுத்த முடியாது. நாங்கள் அனைவரும் எங்களுடைய குடும்பத்திற்கும், எங்களுக்குமான பாதுகாப்பையே வேண்டுகின்றோம். மருத்துவ அவசரத் தேவைகளின் போது எங்களுக்கு மிகச்சிறந்த சுகாதாரப் பராமரிப்பு அவசியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை, அத்துடன் நாங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது நிதியியல் பாதுகாப்பொன்றும் அவசியம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியதில்லை.

AIA வாடிக்கையாளர்கள் தங்களது கட்டுப்பணங்களை வருடாந்தம் செலுத்த முடிவதோடு முதிர்வின் போது மிகப்பெரியதொரு நிதித் தொகை, எந்தவொரு வட்டியுமற்ற அல்லது மேலதிகக் கட்டணங்களுமற்ற வருடாந்தக் கட்டுப்பணக் கழிவுகள், வருடம் முழுவதும் உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு, மற்றும் AIA ரியல் ரிவாட்ஸ் (நிஜ வெகுமதிகள்) உடனான மிகப்பெரிய வாடிக்கையாளர் வெகுமதிகள் உள்ளடங்கலாக மிகச்சிறந்த அனுகூலங்களையும் அனுபவிக்க முடியும். எனினும், அனைவராலும் வருடாந்தக் கட்டுப்பணமாக மொத்தத் தொகை ஒன்றைச் செலுத்த இயலாமல் இருக்கும், இதன் விளைவாக எம்மில் பெரும்பாலானவர்கள் மாதாந்தக் கட்டுப்பண முறை ஒன்றையே தெரிவு செய்கின்றோம், எவ்வாறாயினும் இது வருடாந்தக் கட்டுப்பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் மேலதிக அனுகூலங்களை வழங்காது.

இதனாலேயே AIA இன்ஷுரன்ஸ் காப்புறுதி ஒன்றின் கொள்வனவை மிகவும் இலகுவானதாகவும், மலிவானதாகவும் மாற்றியுள்ளது. நீங்கள் உங்களது AIA இன்ஷுரன்ஸ் கட்டுப்பணத்தை உங்களுடைய கடனட்டையின் மூலமாகச் செலுத்தினால், வருடாந்தக் கட்டுப்பணத்திற்குக் கிடைக்கப் பெறும் அனைத்து மேலதிக அனுகூலத்தையும் மாதாந்த முறையில் கட்டுப்பணத்தைச் செலுத்தும் போதும் அனுபவிக்க முடியும்.

இந்த அற்புதமான சலுகையானது கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி, HNB ஆகிய கடனட்டை உரிமையாளர்களுக்கு 0 %வட்டியுடன் வழங்கப்படுவதோடு, உங்களுடைய பொருட் கொள்வனவுப் பட்டியலிலுள்ள ஏனைய பொருட்களைப் போன்று மிகவும் மலிவாகவும், இலகுவாகவும் காப்புறுதிக் கொள்வனவையும் உங்களால் மேற்கொள்ள முடியும்.

இச்சலுகையானது AIA யினுடைய பிரீமியர் காப்புறுதித் திட்டங்களான AIA ஹெல்த் புரடெக்டர் (AIA Health Protector) மற்றும் AIA ஸ்மாட் பென்சன்ஸ் (AIA Smart Pensions) ஆகிய திட்டங்களுக்கே வழங்கப்படும்.

நீங்கள் HNB, DFCC, கொமர்ஷல் ஆகிய ஏதாவது ஒரு வங்கியின் கடனட்டையை வைத்திருந்தால் இச்சலுகையை எவ்வாறு நீங்கள் பிரயோசனமாகப் பயன்படுத்த முடியும் என்பதை அறிய 0112 310310 இனூடாக AIA இன்ஷுரன்ஸிற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள். உங்களிடம் கடனட்டை ஒன்று இல்லையெனில் கடனட்டை ஒன்றைப் பெறுவதைப் பற்றி சிந்திப்பதனூடாக குறைந்த மாதாந்த செலவில் வருடம் முழுவதும் மன நிம்மதியான காப்புறுதிப் பாதுகாப்பினை நீங்கள் அனுபவிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *